கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி சுதந்திர தின விழா மற்றும் பரிசளிப்பு விழா!கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி சுதந்திர தின விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி 77-வது சுதந்திர தின விழா இன்று 15.08.2023 செவ்வாய்க்கிழமை சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.கோபாலப்பட்டிணம் ஜமாத்தார்கள் ,பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பொதுநல அமைப்புகள், மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். பள்ளியின் தலைமையாசிரியர் லு.சின்னப்பன்Msc.,Med., வரவேற்புரை ஆற்றினார். கோபாலப்பட்டிணம் ஜமாத் தலைவர் OSM.முகம்மது அலி ஜின்னா கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார். சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியில் கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments