திருப்புனவாசலில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஊட்டிவிட்டு அன்பை பரிமாறிய Ex-Students கல்வி போதித்த ஆசிரியருக்கு தங்க மோதிரம் பரிசு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா திருப்புனவாசல் கிராமத்தில் அரசு உதவி பெறும் ஸ்ரீ ராமகிருஷ்ணா விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 900க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.இந்நிலையில் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவ மாணவியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி,ஆசிரியர்களை பாராட்டுதல் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.படிக்கும் போது நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.மேலும் அவர்களுடைய முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் பெருமக்களை அழைத்து சிறப்பு செய்தனர்.

அதனை தொடர்ந்து சுப்பிரமணியன் ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தி அவருக்கு தங்க மோதிரம் பரிசாக அளித்தனர்.அதனை தொடர்ந்து அனைவரும் ஒன்று கூடி செல்பி எடுத்துக் கொண்டனர். அதோடு மட்டுமல்லாது முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் உணவு வூட்டி தங்கள் பாசத்தை வெளிப்படுத்தி கொண்டனர். முன்னாள் மாணவர்கள் நடத்திய நிகழ்வானது காண்போர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments