புதுக்கோட்டைக்கு விலையில்லா புத்தக பைகள் வந்தன
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், விலையில்லா புத்தக பைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 1 முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா புத்தக பைகள் வழங்கப்படுவதற்காக புதுக்கோட்டைக்கு வந்தன. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தின் அருகே உள்ள குடோனில் அவை அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. சுமார் 1 லட்சம் விலையில்லா புத்தக பைகள் வந்துள்ளதாக கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments