தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் காசிம்புதுப்பேட்டை கிளை சார்பில் 18.08.23 அன்று சமூக விழிப்புணர்வு தெருமுனை கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் காசிம்புதுப்பேட்டை கிளை சார்பில்  18.08.23 அன்று  சமூக விழிப்புணர்வு தெருமுனை கூட்டம்  நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் முகம்மது மீரான் தலைமை வகித்தார். கிளை நிர்வாகிகள் பசீர் அலி  முன்னிலை வகித்தனர். 

இதில் மாநில பேச்சாளர் சகோதரர் சுஜா அலி MISC மற்றும் ஆவணம் ரியாஸ் சிறப்புறையாற்றினார்கள்.

இதில் ஆண்கள் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் இதில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றபட்டன

நாங்குநேரி கொலை வெறி தாக்குதல்

1. நாங்குநேரி கொலை வெறி தாக்குதல்

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும் தூத்துக்குடி.மாவட்டம் நாங்குநேரி பகுதியில் சாதிய வெறி முற்றி போய் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் தாழ்த்தப்பட்ட.சமுதாயம் என கருதப்படும் மாணவரை வீடு புகுந்து வெட்டியுள்ளனர், பெரியளவில் இரத்தம் வெளியெறி ஆபத்தான நிலையில் இம்மாணவர் சிகிச்சை பெற்று வருகிறார், பள்ளிக்கூடத்தில் படிக்கும் சக மாணவர்களால் நன்றாக படிக்கும் இம்மாணவர் தொடர்ந்து கேலி செய்யப்பட்டுள்ளார், சாதிய  ரீதியாக தாழ்வாக நடத்தப்பட்டுள்ளார், சாதிய மேலாதிக்க உணர்வுகள் இவ்வாறு பள்ளி மாணவர்களுக்கு ஊட்டப்படுவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றத்தில் ஈடுபட்ட மாணவர்களை மட்டும் தண்டிக்காமல் சமீப காலமாக வன்முறையை தூண்டும் வகையில்  பேசிய சாதிய பிரமுகர்கள் கைது செய்யப்பட வேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.


பொதுசிவில் சட்டம்

2.பொதுசிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்களும், மத அமைப்புகளும் கருத்துக்களை தெரிவிக்க  ஒன்றிய சட்ட ஆணையம் அறிவித்து சுமார் 80 இலட்சத்திற்கும் அதிகமான கருத்துக்கள் பதியப்பட்டுள்ளதாக 

இந்நிலையில் திமுக , விசிக, அதிமுக,   போன்ற கட்சிகள் இச்சட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தது வரவேற்கத்தக்கது  நம் நாட்டில் குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதாகவே உள்ளது.  ஆனால் திருமணம் , விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்துரிமை, ஈமக் காரியங்கள் போன்ற உரிமை சார்ந்த விவகாரங்களில் மட்டும் ஒவ்வொருவரும் தத்தமது மதச் சட்டங்களின் படி நடந்து கொள்ள நம் நாட்டுச் சட்டம் வகை செய்கின்றது. பல தரப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் இதுவே ஏற்றமான சட்டமும் சமத்துவத்திற்கான வழிமுறையுமாகும்.

எனவே இந்தியாவின் இறையாண்மைக்கும், தேச ஒருமைப்பாட்டிற்கும் எதிராக அமைந்துள்ள இந்த பொது சிவில் சட்டம் தொடர்பான முன்னெடுப்புகளை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  கேட்டுக் கொள்கின்றது.

3.வெள்ளை அறிக்கை 

. தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு நடைமுறையில் இருக்கும் கல்வி வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

மூன்றரை சதவீத இடஒதுக்கீடு முறையாக பல துறைகளில் வழங்கப்படுவதில்லை. மதம் மாறி இஸ்லாத்தை தழுவியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. 

ரோஸ்டர் முறையில் சரியான வரிசை முறைப்படி இஸ்லாமியர்கள் பயன்பெற முடிவதில்லை.

இஸ்லாமியர்களின் சதவீதத்தோடு ஒப்பிடுகையில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு குறைவு. இதில் பல குளறுபடிகள் உள்ளது.

தமிழக அரசு இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை அனைவரும் தெளிவாக அறியும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைவரும் பயன்பெறும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து விகிதாச்சார பிரிநிதித்துவ முறையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என இந்த கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
 


4.முஸ்லிம் சிறைவாசிகள் 

. தமிழக சிறை வாசிகள் ஆண்டு தோறும் அண்ணா பிறந்த நாளன்று விடுதலை செய்யப்படுகின்றனர்.  

ஆனால்  நீண்ட காலமாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது இல்லை.

மதத்தின் பெயரால் அவர்கள் மீது காட்டப்படும் இந்த  வேற்றுமை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், ஆதிநாதன் ஆணையத்தின் அறிக்கை மீதான நடவடிக்கையை மாநில அரசு விரைந்து எடுக்க வேண்டும் என இந்த கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

5.கல்வியில் கவனம் செலுத்துவோம். 

 இஸ்லாமிய சமுதாயம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் அதில் ஒன்று கல்வியின்மையாகும். 

பல கோடி மக்களை கல்வி வேலைவாய்ப்பில் முன்னேற்றுவது என்பது ஒரு அரசுக்குத்தான் சாத்தியம் என்றாலும் இஸ்லாமிய சமூகம் தன்னளவில் செய்ய வேண்டிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

உயர்கல்வியில் தன்னை முன்னேற்றி கொள்ள தொடர்ந்து உழைக்க வேண்டும் எனும் செய்தியை தொடர்ந்து மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்போம் என இந்த கூட்டம்  வாயிலாக அறிவித்து கொள்கிறோம்.

6.கடந்த சட்ட மன்ற தேர்தலில் சிறுபான்மை சமூகத்தின் மொத்த வாக்குகளையும் பெற்று ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 3.5% இடஒதுக்கீட்டை 7%  இடஒதுக்கீட்டை உயர்த்தி தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

7.கீரமங்கலம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட காசிம்புதுப்பேட்டையில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை விரைந்து சீரமைத்து தருமாறு இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.


8.காசிம்புதுப்பேட்டை குடியிருப்புக்குள் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பெண்கள் கடும் அச்சமுற்ற நிலையில் உள்ளனர் எனவே உடனடியாக தெரு நாய்களை கட்டுப்படுத்துமாறு இக் 
 கூட்டத்தில் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments