சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்; ரூ. 40 லட்சம் வழங்கிய தமிழக அரசு!




தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளது. 

தமிழகம் முழுவதும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் சென்னையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அதிலும் குறிப்பாகப் பண்டிகை நாட்களில் சென்னை மாநகரம் கடும் வாகன நெரிசலில் சிக்கத் தவிக்கும். கோயம்பேட்டில் இருந்து தாம்பரம் செல்லவே சில மணி நேரம் ஆகிவிடும்.

இதனைத் தவிர்க்க சுமார் 393 கோடி செலவில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் பேருந்து நிலையம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்தப் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால், தென் தமிழகத்துக்கு செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இங்கிருந்தே புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து நிலையம் அருகே பயணிகள் வசதிக்காக, வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே புதிய புறநகர் ரயில் நிலையம் அமைப்பது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகத்துடன் தமிழக அரசு பேச்சு வார்த்தை மேற்கொண்டது. அப்போது சென்னை கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து நிலையம் அருகே பயணிகள் வசதிக்காக புதிய ரயில் நிலையம் அமைக்க தமிழக அரசு வைத்த கோரிக்கையை ரயில்வே துறை ஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து புறநகர் ரயில் அமைப்பதற்கான முழுச்செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்வதாக ஒப்புதல் வழங்கி இருந்தது. அதன்படி புதிய ரயில் நிலையம் அமைக்க தமிழக அரசு முதற்கட்டமாக 40 லட்ச ரூபாயை ரயில்வே துறைக்கு வழங்கியுள்ளது. புறநகர் ரயில் அமைக்க ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் ஓராண்டில் புறநகர் ரயில் நிலையக் கட்டுமானப் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

2 Comments

  1. தவறான தகவல் 40 இலட்சம் ரூபாயை வைத்து என்ன செய்ய முடியும்? 20கோடி கொடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தினர், ஒப்பந்தமாகிருக்கிறது....

    ReplyDelete
    Replies
    1. தமிழக அரசு முதற்கட்டமாக 40 லட்ச ரூபாயை ரயில்வே துறைக்கு வழங்கியுள்ளது.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.