பி.எஸ்.சி. நர்சிங் படித்தவர்களுக்கு சவுதி அரேபியாவில் அரசு பணி-தமிழக அரசு சார்பில் 5-ந்தேதி சிறப்பு முகாம்!



பி.எஸ்.சி. நர்சிங் படித்தவர்களுக்கு சவுதி அரேபியாவில் அரசு பணிக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு சார்பில் 5-ந்தேதி சிறப்பு முகாம் நடக்கிறது.

தமிழக அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் சார்பில் நர்சு பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சவுதி அரேபிய அமைச்சகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு 2 வருட அனுபவத்துடன் பி.எஸ்.சி. நர்சிங் தேர்ச்சி பெற்ற 21 முதல் 35 வயதிற்கு உட்பட்ட பெண் நர்சுகள் தேவைப்படுவதாகவும், டேட்டா ப்ளோ மற்றும் எச்.ஆர்.டி. சான்றிதழ் பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியாளர்களுக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம், உணவுப்படி, இருப்பிடம், விமான டிக்கெட் ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்போரால் வழங்கப்படும்.

இந்த பணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 5-ந்தேதி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தால் சிறப்பு பதிவு முகாம் நடைபெறுகிறது. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், விருப்பமும் உடைய பி.எஸ்.சி. நர்சிங் படித்த மகளிர் அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த முகாமிற்கு வரமுடியாதவர்கள் தங்களுடைய சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கலாம். மேலும் இந்த பணிக்கு தேர்வுபெறும் பணியாளர்களிடமிருந்து சேவைக்கட்டணமாக ரூ.35,400 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.com-ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் (9566239685, 6379179200) (044-22505886, 044-22502267) வாயிலாக அறிந்து கொள்ளலாம். இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments