கோட்டைப்பட்டினம் மீனவர் வலையில் சிக்கிய 20 கிலோ கூரல் மீன் ரூ.1¼ லட்சத்திற்கு விற்பனை!கோட்டைப்பட்டினம் மீனவர் வலையில் சிக்கிய 20 கிலோ கூரல் மீன்  ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்திற்கு விற்பனையானது.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் மீன்பிடித்துக் கொண்டு நேற்று கரை திரும்பினர். அப்போது மீனவர் ஒருவர் வலையில் சுமார் 20 கிலோ எடை கொண்ட கூரல் மீன் சிக்கியது. 

இதையடுத்து கரையில் காத்திருந்த வியாபாரிகள் அந்த மீனை ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்திற்கு வாங்கி சென்றனர். இந்த மீன் ஒரு கிலோ ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விலை போகும். இந்த மீன் உணவுக்காக இவ்வளவு விலை போவதில்லை. மாறாக இந்த மீனின் வயிற்றில் உள்ள நெட்டிக்காக விலை அதிகமாக உள்ளது. இந்த நெட்டியானது மருத்துவத்துறையில் முக்கிய பங்கு வகிப்பதால் அதிக விலைக்கு போகிறது. இந்த வகையான கூரல் மீன் அதிகமாக சிக்குவதில்லை. தற்போது மீனவர் ஒருவர் வலையில் இந்த மீன் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 

இதில் மீனவர்கள் வலையில் அதிகளவு திருக்கை மீன்கள் சிக்கியது. இதையடுத்து அந்த மீன்களை மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து மீனவர்கள் விற்பனை செய்தனர். இந்த திருக்கை மீன்கள் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments