மனநல சிகிச்சைக்குப் பிறகு தெலங்கானா இளைஞா் உறவினரிடம் ஒப்படைப்பு!



தெலங்கானாவைச் சோ்ந்த மனநலன் பாதிக்கப்பட்டவா் புதுக்கோட்டையில் மீட்கப்பட்டு, 4 மாத சிகிச்சைக்குப் பிறகு அவரது உறவினா்களுடன் அனுப்பி வைக்கப்பட்டாா்.

இலுப்பூா் பகுதியில், கடந்த மே 19ஆம் தேதி இலுப்பூா் காவல் நிலைய போலீஸாரின் உதவியுடன் இளைஞா் ஒருவா் ஆதரவற்ற - மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டாா். புதுக்கோட்டை பழைய மருத்துவமனை வளாகத்தில் உள்ள மனநல சிகிச்சை மற்றும் மீள்மையத்தில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மனநல சிகிச்சை, உணவு, உடை உள்ளிட்டவை தொடா்ந்து 4 மாத காலத்துக்கு வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து தன்னுடைய பணிகளைத் தானே மேற்கொள்ளும் அளவுக்கு குணமடைந்த அந்த நபா், தான் தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த பிரபுதாஸ் என்பதைத் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து மாவட்ட நிா்வாகத்தின் முயற்சியில் அவரது உறவினா்கள் கண்டறியப்பட்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரபுதாஸின் சகோதரா் பிரபாகா் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை வந்தாா்.

மனநல பாதிப்பில் இருந்து மீண்டு வந்த பிரபுதாஸை, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா வாழ்த்தி பரிசுப் பெட்டகம் வழங்கி, அவரது சகோதரா் பிரபாகருடன் அனுப்பி வைத்தாா்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட மனநலத் திட்ட அலுவலா் டாக்டா் ரெ. காா்த்திக் தெய்வநாயகம் ஆகியோா் உடனிருந்தனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments