புதுக்கோட்டை-சேலம்-புதுக்கோட்டை முன்பதிவில்லா இணைப்பு ரயில் (தினசரி).! புதுக்கோட்டை வாசியா நீங்கள் உங்களுக்கானது தான் இந்த பதிவு!!சேலம்/நாமக்கல்/கரூர் அடிக்கடி சென்று வரும் புதுக்கோட்டை வாசிகளுக்கு வரும் 28/08/23 திங்கள் கிழமை முதல் இந்த இணைப்பு ரயில் கிடைக்கும். திருச்சி சென்று ரயில் மாற வேண்டும்.

 2 ரயில்களிலும் தொடர்ந்து பயணிக்க புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து நீங்கள் பயணிக்க விரும்பும் மற்ற ரயில் நிலையங்களுக்கோ அல்லது மற்ற ரயில் நிலையங்களிலிருந்து புதுக்கோட்டைக்கோ நேரடியாக முன்பதிவில்லா டிக்கெட் பெற்று பயணிக்கலாம். இவ்வாறு நேரடியாகமுன்பதிவில்லா டிக்கெட் பெறும்போது ஒரு டிக்கெட்க்கு ₹20 ரூபாய் மிச்சப்படுத்தலாம்.

குறிப்பு: அட்டவணையில் உள்ள கட்டண விவரம் புதுக்கோட்டைக்கானது மட்டுமே. உதாரணமாக நீங்கள் புதுக்கோட்டையிலிருந்து சேலத்திற்க்கோ அல்லது சேலத்திலிருந்து புதுக்கோட்டைக்கோ நேரடி முன்பதிவில்லா டிக்கெட் பெற்றால் ₹85/- ரூபாய் ஆகும். அதே முறை தான் அட்டவணையில் உள்ள மற்ற ரயில் நிலையங்களுக்கும்.

திருச்சி - சேலம் வழித்தடத்தில் நின்று செல்லும் முக்கிய ரயில் நிலையங்கள் மட்டுமே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
வரும் 28/08/23 திங்கள் கிழமை முதல் தினசரி புதுக்கோட்டை-சேலம்-புதுக்கோட்டை இணைப்பு ரயில் முழு பயணமும் கழிவறை வசதியுடன்)

புதுக்கோட்டை-சேலம் இணைப்பு ரயில்(தினசரி),

06126/காரைக்குடி-திருச்சி சிறப்பு பயணிகள் ரயில்(தினசரி)

➧புதுக்கோட்டை-07:50 am காலை புறப்படும் 
➧திருச்சி-09:10 am காலை செல்லும் 

திருச்சியில் இறங்கி ரயில் மாறிக்கொள்ளவேண்டும் 

16811/மயிலாடுதுறை-சேலம் முன்பதிவில்லா ரயில்(தினசரி)

➧திருச்சி-09:40 am காலை புறப்படும் 
➧குளித்தலை- 10:44 am 
➧கரூர் - 11:43 am 
➧நாமக்கல் - 12:29 pm 
➧ராசிபுரம் - 12:54 pm 
➧சேலம் - 01:45 pm மதியம் செல்லும் 

இரண்டு ரயில்களிலும் தொடர்ந்து பயணிக்க புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நேரடியாக முன்பதிவில்லா டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு நேரடியாக டிக்கெட் பெறும்போது ஒவ்வொரு டிக்கெட்டுக்கு ₹.20 குறைவு. பேருந்தை ஒப்பிட்டால் ₹.80 முதல் ₹.100 ருபாய் வரை குறைவு.  சேலத்திற்கு டிக்கெட் பெறும்போது மட்டும் "வழி திருச்சி , கரூர், நாமக்கல்" என குறிப்பிட்ட டிக்கெட் பெறவும்.

டிக்கெட் கட்டண விவரம்:
➽புதுக்கோட்டை-சேலம்-₹.85/-
➽புதுக்கோட்டை-ராசிபுரம்-₹.75/-
➽புதுக்கோட்டை-நாமக்கல்-₹.70/-
➽புதுக்கோட்டை-கரூர்- ₹.60/-
➽புதுக்கோட்டை-குளித்தலை-₹.50/-

மறுமார்கத்தில், 
சேலம்-புதுக்கோட்டை இணைப்பு ரயில்(தினசரி)
 
16812/சேலம்-மயிலாடுதுறை முன்பதிவில்லா ரயில்(தினசரி)

➧சேலம் - 02:05 pm மதியம் புறப்படும் 
➧ராசிபுரம் - 02:32 pm 
➧நாமக்கல் - 02:54 pm 
➧கரூர் - 03:38 pm 
➧குளித்தலை- 04:46 pm 
➧திருச்சி-05:55 pm மாலை வரும் 

திருச்சியில் இறங்கி ரயில் மாறிக்கொள்ளவேண்டும் 

06125/திருச்சி-காரைக்குடி சிறப்பு பயணிகள் ரயில்(தினசரி)

➧திருச்சி-06:15 pm மாலை புறப்படும் 
➧புதுக்கோட்டை-07:08 pm வரும் 

இரண்டு ரயில்களிலும் தொடர்ந்து பயணிக்க சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலிருந்து நேரடியாக புதுக்கோட்டைக்கு முன்பதிவில்லா டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு நேரடியாக டிக்கெட் பெறும்போது தனித்தனியாக டிக்கெட் பெறுவதை விட ஒவ்வொரு டிக்கெட்டுக்கு ₹.20 குறைவு. பேருந்தை ஒப்பிட்டால் நீங்கள் பயணிக்கும் ரயில் நிலையத்தை பொறுத்து  ₹.30 முதல் ₹.100 ருபாய் வரை கட்டணம் குறைவு.   

சேலத்திலிருந்து பயணிப்பவர்கள் மட்டும் டிக்கெட் பெறும்போது "வழி நாமக்கல்,கரூர்,திருச்சி" என குறிப்பிட்டு டிக்கெட் பெறவும்.

டிக்கெட் கட்டண விவரம்:
➽சேலம்-புதுக்கோட்டை-₹.85/-
➽ராசிபுரம்-புதுக்கோட்டை-₹.75/-
➽நாமக்கல்-புதுக்கோட்டை-₹.70/-
➽கரூர்-புதுக்கோட்டை- ₹.60/-
➽குளித்தலை-புதுக்கோட்டை-₹.50/-

இரண்டு ரயில்களில் தற்போது கழிவறை வசதி உள்ளதால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என குடும்பமாக பயணிக்க ஒரு சிறந்த இணைப்பு ரயில் இதுவாகும்.

புதுக்கோட்டை வாசிக்கள் இந்த இணைப்பு ரயில் சேவையை இரு மார்கங்களிலும் பயன்படுத்தி பயன்பெறுவீர்.

புதுக்கோட்டை வாசிகள் இந்த சிறந்த சேவையை பயன்படுத்தி பயன்பெறுவீர்!

News & Image's Credit: Pudukottai Rail Users

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments