மணமேல்குடி வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான வட்டார அளவிலான கூட்டம்!



மணமேல்குடி வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான வட்டார அளவிலான கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தினை மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் தலைமையில் தொடங்கியது. உள்ளடங்கிய கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் பயிற்றுநர் அங்கையற்கண்ணி முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் மாற்று திறன் கொண்ட குழந்தைகளைக் கண்டறிந்து பள்ளியில் சேர்த்தல் வேண்டும் என்றும், வருகின்ற மருத்துவ முகாமினை எவ்வாறு நடத்துவது என்று முன் திட்டமிடல் குறித்து ஆலோசனைகள் செய்யப்பட வேண்டும் என்றும், எண்ணும் எழுத்தும் புத்தகங்களை ஆன்லைனில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், ஆன்லைனில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்றும் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் அடையாள அட்டைகளை பெற்று தர வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில் சிறப்பாசிரியர் மணிமேகலை நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் ஆசிரியர் பயிற்றுநர் முத்துராமன், சிறப்பாசிரியர் கோவிந்தன், கணக்காளர் கலைச்செல்வன் மற்றும் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments