புதுக்கோட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் 


புதுக்கோட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 புதுக்கோட்டை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி மகளிர் கலைக்கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26-ந் தேதி நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்த உள்ளனர். முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்த வேலை வாய்ப்பு முகாம்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

 கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகண்டன் (பொது), வேல்முருகன் (தொழில்நெறி வழிகாட்டல்), வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செய்யது முகம்மது, முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments