அதிராம்பட்டினத்தில் அனைத்து ரயில்கள் நின்று செல்ல கோரி திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரிடம் அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நல சங்கம் கோரிக்கை மனு அளித்தார்கள்
அதிராம்பட்டினம் இரயில் பயணிகள் நலச் சங்கத்தின் செயலாளர் அ.அப்துல் ரஜாக், பகுருதீன் , அஜீஸ் ரஹ்மான் ஆகியோர் 21.08.2023 திங்கட்கிழமை அன்று திருச்சியில் தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் அவர்களை கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து அதிராம்பட்டினம் பகுதி சம்பந்தப்பட்ட இரயில்வே கோரிக்கை மனு கொடுத்தனர். உடன் திருச்சி கோட்ட முதுநிலை இயக்கவியல் மேலாளர் ஹரிகுமார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் உடனிருந்தனர்.
கோரிக்கையில்
* அதிராம்பட்டினம் இரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல செல்லவும்
* பரிந்துரைக்கப்பட்ட ரயிலான திருச்சி சென்னை திருச்சி சோழன் பகல் நேர அதிவிரைவு இரயிலுக்கு இணைப்பு இரயிலாக காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு அதிராம்பட்டினம் வழியாக ரயிலை இயக்க வேண்டும்
* அதிராம்பட்டினம் இரயில் நடைமேடை நீளம் குறைவாக இருப்பதால் இரயில்களின் இரயில் பெட்டிகள் நடைமேடைக்கு வெளியே நிற்கிறது இதனால் பயணிகள் ஏற இறங்க மிகவும் சிரமப்படுகிறார்கள் எனவே நடைமேடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் .
* அதிராம்பட்டினம் வழியாக சென்னை - காரைக்குடி இடையே இரவு நேர தினசரி ரயில் இயக்க வேண்டும்
என கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது
கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட இரயில்வே கோட்ட மேலாளர் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.