புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் இரவு பனை மரங்களை வெட்டி செங்கல் சூளைக்காக லாரிகளில் ஏற்றி அனுப்பப்படுவதையறிந்த நாம் தமிழர் கட்சியினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள், தமிழக அரசு பனை மரங்களை வளர்க்க வேண்டும். இருக்கும் மரங்களை பாதுகாக்க வேண்டும் என்று ஊராட்சிகளில் பனை விதைகளை நடவு செய்ய உத்தரவிட்டுள்ளது. அதனால் நிலத்தடி நீரை பாதுகாக்கும் பனை மரங்களை வெட்டக் கூடாது என்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில் ஒரு லாரியில் பனை மரங்கள் ஏற்றி கொண்டு செல்வதைப் பார்த்த நாம் தமிழர்கட்சியினர் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் லாரியை சிறைபிடித்தனர். தொடர்ந்து பனை மரங்களை கீழே இறக்கிவிட்டு லாரியை மட்டும் திருப்பி அனுப்பி வைத்தனர்.
கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் அடிக்கடி பனை மரங்கள் வெட்டி ஏற்றப்படுவதை தடுக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதி இளைஞர்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.