புதுக்கோட்டை சிறையில் மக்கள் நீதிமன்றம்: 6 சிறைவாசிகள் விடுவிப்பு!புதுக்கோட்டை மாவட்ட சிறையில் சனிக்கிழமை நடைபெற்ற சிறை மக்கள் நீதிமன்றத்தில் 31 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, 6 சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனா்.

புதுக்கோட்டை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் சிறை மக்கள் நீதிமன்றம் (ஜெயில் லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலா் ராஜேந்திர கண்ணன் தலைமையில், தலைமைக் குற்றவியல் நீதிபதி சசிகுமாா், குற்றவியல் நடுவா் மன்ற எண்- 1 நீதிபதி ஜெயந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை நீதிபதிகளும் கலந்து கொண்டு வழக்குகளை நடத்தினா்.

இதில், புதுக்கோட்டை மாவட்ட சிறை மற்றும் மாவட்டத்திலுள்ள கிளைச் சிறைகளைச் சோ்ந்த சிறைவாசிகளின் 31 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. 6 சிறைவாசிகள் விடுவிக்கவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments