மீமிசல், கோட்டைப்பட்டினம் பகுதிகளில் ஆவின் பால் தட்டுபாடு இதே நிலை தொடர்ந்தால் ஆவின் வாகனம் சிறை பிடிக்கப்படும் பொதுமக்கள் முடிவு


புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கோட்டைப்பட்டினம் மீமிசல் ஆகிய ஊர்களில் ஆவின் பால் தட்டுப்பாடு.

தாய் பாலுக்கு நிகரான ஆவின் பால் பிஞ்சு குழந்தைகளின் சத்துணவாக இருந்து வருகிறது ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு கட்டுபடியாகும் விலையில் பாலை ஆவின் நிறுவனம் வழங்கி வருகிறது கோட்டைப்பட்டினம், மீமிசல் பகுதிக்கு புதுக்கோட்டையில் இருந்து மதியம் 5 மணி 6 மணிக்கு வர வேண்டிய ஆவின் பால் வாகனம் இரவு 9 மணி 10 மணிக்கு தான் வருகிறது.

இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆவின் பால் தட்டுபாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது. ஆவின் பால் முகவர்களிடம் கேட்டால் பால் வாகனம் வரவில்லை இரவு 9மணி 10 மணிக்கு தான் வருகிறது என்று பால் இல்லை என்று சொல்லிவிடுகிறார்கள். இது சம்மந்தமாக புதுக்கோட்டை ஆவின் மேலாளர் யை சமூக ஆர்வலர்கள் தொடர்பு கொண்டு பேசமுடியவில்லை என கூறுகின்றனர். மேலும்
இதே நிலைமை நீடித்தால் மக்களை திரட்டி ஆவின் பால் வாகனத்தை முற்றுகை இடுவோம் என முகவர்கள் ஆவின் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்துகிறோம் என கூறினார். எனவே மீமிசல், கோட்டைப்பட்டினம் பகுதிக்கு வரக்கூடிய வாகனத்தை முன்னதாகவே அனுப்பி வைக்க ஆவின் நிறுவன புதுக்கோட்டை மாவட்ட மேலாளர்க்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments