பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை எப்போ? எத்தனை நாட்கள் தெரியுமா.? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுக்கான தேதியை அறிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, பள்ளிகளின் வகுப்புகளை பொறுத்து 5 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை காலாண்டு தேர்வு விடுமுறை அறிவித்துள்ளது.

காலாண்டு தேர்வு எப்போது.?

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் முக்கியமாக 3 தேர்வுகள் நடத்தப்படும். அந்த வகையில் காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படும். அப்போது தேர்வு முடிவடைந்து மாணவர்களுக்கு சற்று ஓய்வு கொடுக்கும் வகையில் பள்ளிக்கு விடுமுறை வழங்கப்படும் அந்த வகையில் இந்ததாண்டுக்காக காலாண்டு தேர்வுக்கான பட்டியலை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தேர்வுக்கான தேதி அறிவிப்பு

இதன் படி, செப்டம்பர் மாத நாட்காட்டி தகவலின் படி, பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு தேதியை பொறுத்தவரை  1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.14ம் தேதியும், 6-10ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.18ம் தேதியும் தேர்வுகள் துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  11-12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்.15ம் தேதி துவங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காலாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு

காலாண்டு தேர்வுகள் முடிவடைந்து 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.22ம் தேதி முதல் அக்.2ம் தேதி வரை 10 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 4ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.27 தேதி முதல் அக்.2ம் தேதி வரை 5 நாட்கள் மட்டும் காலாண்டு விடுமுறை விடப்படும் என கூறப்படுள்ளது. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments