அறந்தாங்கியில் வர்த்தக சங்கம் & ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு நன்றி அறிவிப்பு விழா!அறந்தாங்கியில் ரயில்வே நுகர்வோர் சங்கம் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.

அறந்தாங்கி வர்த்தக சங்கம் மற்றும் அறந்தாங்கி கோட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம் இணைந்து நடத்திய நன்றி அறிவிப்பு விழா நேற்று முன்தினம் 27.08.2023 அறந்தாங்கி ACC அரங்கத்தில்  நடைபெற்றது. 


கடந்த 15 ஆண்டுகள் கிடப்பில் விடப்பட்ட திருவாரூர்-காரைக்குடி செக்சன் ரயில் வழித்தடத்தில் மீண்டும் ரயில்கள் இயங்க வெகுவாய் அர்ப்பணிப்புடன் ஒத்துழைப்பு நல்கிய அலுவலர்களுக்கு நன்றி அறிவிப்பு விழா  

அறந்தாங்கி வர்த்தக சங்க தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில துணைத்தலைவர் தமிழ்நாடு அரசு வணிகர்நல வாரிய உறுப்பினர் S.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. 


 திருச்சி ரயில் கோட்ட முதுநிலை இயக்க மேலாளர் M.ஹரிகுமார் IRTS, திருச்சி ரயில் கோட்ட வணிக மேலாளர் D.மோகனப்பிரியா IRTS, திருவாரூர் செக்சன் ரயில் அலுவலர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அறந்தாங்கி வர்த்தக சங்க நிர்வாகிகள், அறந்தாங்கி ரயில் உபயோகிப்பாளர் சங்கம் நிர்வாகிகள், ரயில் ஆர்வலர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் 


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments