டிசம்பர் 14 வரை இலவசம்... ஆதார் புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!






ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க காலக்கெடு டிசம்பர் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் தகவல்களை அப்டேட் செய்வது கட்டாயம் என்று அண்மையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்தது. அதனை மை ஆதார் போர்ட்டல் வழியாக அப்டேட் செய்து கொள்ள முடியும்.

இலவசமாக அப்டேட் செய்து கொள்ளும் வசதி செப்டம்பர் 14-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில், இதற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதால் மேலும் 3 மாதங்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வாழும் மக்களின் முக்கிய அடையாள அட்டையாக ஆதார் உள்ளது. இந்த ஆதார் அட்டை பெற்று பத்து வருடம் நிறைவு செய்தவர்கள், அதை இலவசமாக இந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி வரை புதுப்பித்து கொள்ளலாம். 

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ஆதாரில் உள்ள ஆவணங்களை புதுப்பிக்கும் கடைசி தேதியை செப்டம்பர் 14 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆதார் அட்டையை புதுப்பித்து கொள்வதற்கான கால அவகாசத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளதாக யூஐடிஏஐ தெரிவித்துள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ஆதாரில் உள்ள ஆவணங்களை புதுப்பிக்கும் கடைசி தேதியை செப்டம்பர் 14 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆதாரில் கொடுக்கப்பட்டுள்ள முகவரி, செல்போன், பிற ஆவணங்களில் ஏதாவது மாற்றம் இருந்தால் அதை புதுப்பித்து கொள்ளலாம். அதற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படாது.

வரும் டிசம்பர் 14 வரை இலவசமாக myAadhaar போர்ட்டல் மூலம் ஆதாரில் தங்கள் ஆவணத்தை புதுப்பிக்க முடியும்.
ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பித்து கொள்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென பலரும் கோரிக்கை வைத்தனர். தற்போது இந்த ஆண்டு இறுதி வரை myAadhaar போர்ட்டல் மூலம் ஆவணங்களைப் புதுப்பிக்கும் வசதி இலவசமாக தொடரும். myaadhaar.uidai.gov.in புதுப்பித்து கொள்ள முடியும்.

UIDAI அமைப்பு 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்றவர்கள் அதை புதுப்பித்துள்ள கொள்ள வேண்டுமென தெரிவித்திருந்தது. எந்த விவரத்தை புதுப்பிக்க வேண்டுமோ அதற்கான ஆவணத்தை கொடுத்து புதுப்பித்து கொள்ளலாம்.

இதில் பெயர், முகவரி மாற்றம், திருமணம் அல்லது இறப்பு ஏற்பட்டால் உறவினர்களின் விவரங்கள் மற்றும் பிற விஷயங்களை புதுப்பித்து கொள்ளலாம்.
யுஐடிஏஐ இணையதளத்தில் விவரங்களை இலவசமாகப் புதுப்பிக்கலாம். பொது சேவை மையங்களில் (CSC) 25 ரூபாய் செலுத்தி புதுப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் புதுப்பிப்பு:
 
முகவரிச் சான்றினை இலவசமாகப் பதிவேற்றுவது எப்படி
https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்தில் ஆதார் விவரங்களை புதுப்பித்து கொள்ளலாம். இந்த இணையதளத்தில் உள்நுழைந்து பெயர்,பாலினம்,பிறந்த தேதி & முகவரி புதுப்பிப்பு கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் எது தேவையோ தேர்வு செய்ய வேண்டும்.
அதன் பிறகு ஆன்லைனில் ஆதார் புதுப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். எந்த விவரத்தை புதுப்பிக்க வேண்டுமோ அதற்கான ஆவணத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு SRN எண் வழங்கப்படும். மேலும் நீங்கள் எந்த விவரத்தை புதுப்பிக்க விரும்புகிறீர்கள் என்பது குறித்த எஸ் எம் எஸ் வரும்.

டிசம்பர் 14ம் தேதி வரை மை ஆதார் போர்ட்டலில் ஆதார் தகவல்களை எளிதாக அப்டேட் செய்து கொள்ளலாம். இதுவே ஆதார் சேவை மையங்களுக்கு சென்றால் 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

நாமாகவே அப்டேட் செய்ய முதலில், https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணைய முகவரிக்கு செல்ல வேண்டும். அதில் லாக் இன் செய்து, பெயர்/ பாலினம்/ பிறந்த தேதி/ முகவரி அப்டேட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அடுத்ததாக அப்டேட் ஆதார் ஆன்லைன் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். முகவரி சான்று, அடையாள சான்று நகலை பதிவேற்ற வேண்டும். ஆதார் பதிவு செய்த எண்ணுக்கு, சர்வீஸ் ரெக்வஸ்ட் எண் குறுஞ்செய்தியாக வரும். அதை உள்ளீடு செய்து எளிதாக அப்டேட் செய்துவிடலாம்.

ஆன்லைனில் ஆதார் அப்டேட் செய்வது எப்படி?

1.முதலில் https://myaadhaar.uidai.gov.in/ இணைய முகவரிக்கு செல்ல வேண்டும்.

2.அடுத்ததாக, லாக் இன் செய்து, பெயர்/ பாலினம்/ பிறந்த தேதி/ முகவரி அப்டேட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.

3. அடுத்ததாக அப்டேட் ஆதார் ஆன்லைன் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

4. முகவரி சான்று, அடையாள சான்று நகலை பதிவேற்ற வேண்டும்.

5.ஆதார் பதிவு செய்த எண்ணுக்கு, சர்வீஸ் ரெக்வஸ்ட் எண் (எஸ்.ஆர்.என்) குறுஞ்செய்தியாக வரும்.

ஆதார் அப்டேட் நிலவரம் குறித்து அறிந்து கொள்ள 1947 என்ற டோல்ப்ரீ எண்ணுக்கு அழைக்கலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments