தொண்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் தாசில்தார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு




தொண்டி பேரூராட்சியில் சாலைகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது மற்றும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்வது தொடர்பான கூட்டம் தனியார் மகாலில் நடைபெற்றது. தாசில்தார் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான், தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வர்த்தக சங்கத்தினர், வணிகர் சங்கப்பிரதிநிதிகள், தனியார் வாகன ஓட்டுனர்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் வணிக நிறுவனங்கள் சாலை ஓரங்களில் உள்ள தங்களின் ஆக்கிரமிப்புகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்றும் ஆக்கிரமிப்புகளை குறிப்பிட்ட தேதிக்குள் அகற்றிக் கொள்ள தவறும் பட்சத்தில் வருகிற 26-ந் தேதி நெடுஞ்சாலை துறை பேரூராட்சி, வருவாய் துறை, காவல்துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரூராட்சி இளநிலை உதவியாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments