மணமேல்குடி ஒன்றியத்தில் கிராம முன்னேற்ற விவசாயிகள் குழு கூட்டம்




மணமேல்குடி ஒன்றியத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் அட்மா திட்டத்தின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கோலேந்திரம் வருவாய் கிராமத்தில் கிராம முன்னேற்ற விவசாயிகள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வேளாண் அலுவலர் சிவசங்கரி தலைமை தாங்கி பேசுகையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் வேளாண்மை கிடங்கில் உள்ள இடுபொருட்களின் இருப்பு, அதன் முழு விலை மற்றும் மானிய விலை குறித்த முழு தகவல்களையும் விரிவாக எடுத்துக்கூறினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஷ்வரி பேசுகையில், நெல் விதை நேர்த்தி தொழில்நுட்பத்தினை விளக்கமாக செய்து காண்பித்து, அவற்றின் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துக்கூறினார். மேலும் பயிற்சியில், கோடை உழவு செய்வதன் நன்மைகள், மண் மாதிரி முக்கியத்துவம், ஒருங்கிணைந்த பண்ணை அமைத்தல், பூச்சிநோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள், இயற்கை விவசாயத்தில் ஏற்படும் நன்மைகள் ஆகியவை குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடி விளக்கம் அளிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments