அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ. 12 லட்சத்தில் ஸ்மாா்ட் வகுப்பறைகள்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியின் 4 வகுப்பறைகள் மொத்தம் ரூ. 12 லட்சத்தில் நவீன வசதிகளுடன் திறன்மிகு வகுப்பறைகளாக (ஸ்மாா்ட்) வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டுள்ளன.

இக் கல்லூரியில் 1997 முதல் 2020 வரை பயின்ற முன்னாள் மாணவா்கள் இதற்கான நிதிப் பங்களிப்பில் அமைக்கப்பட்ட வகுப்பறைகள் தொடக்க விழாவுக்கு, கல்லூரியின் முதல்வா் குமாா் தலைமை வகித்தாா். மின்னணுவியல் துறை விரிவுரையாளா் கே.பி. செந்தில்குமாா் வரவேற்றாா்.

பச்சலூா் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஜோதிமணி, ஊா்வணி ஊராட்சித் தலைவா் சந்திரமோகன், துறைத் தலைவா் பி. ஜெயக்குமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments