பரமக்குடி ரயில் நிலையத்தில் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி எம்.பி. ஆய்வு
பரமக்குடி ரயில் நிலையத்தில் நவாஸ்கனி எம்.பி. திடீரென ஆய்வு செய்தார். அப்போது ரயில் பயணிகளிடம் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். ரயில் நிலையத்தில் உள்ள குடிநீர் தொட்டி, கழிப்பறை ஆகியவற்றை பார்வையிட்டு பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என ெரயில் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது பரமக்குடி வியாபாரிகள் சங்கம், நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம், கைத்தறி நெசவாளர்கள் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகள் ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என்றும் சரக்குகளை பாதுகாப்புடன் வைப்பதற்கு சரக்கு குடோன் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.இராமேஸ்வரத்திலிருந்து புறப்படுகின்ற அடியிற்காணும் இரயில்கள் பரமக்குடி இரயில்வே நிலையத்தில் நின்று செல்ல தாங்கள் பரிந்துரை செய்ய வேனுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

விவரம்

1. இராமேஸ்வரம் முதல் செகந்திராபாத் - 07696.

2. இராமேஸ்வரம் முதல் அஜ்மீர் ஹம்சபர் - 20974

3.இராமேஸ்வரம் முதல் அயோத்யா - 22613

4. கன்னியாகுமரி முதல் இராமேஸ்வரம் - 22622

இவை தவிர நம் மாவட்டத்திலிருந்து தலைநகர் சென்னைக்கு அதிக அளவில் மக்கள் இரயிலில் பயணிக்கின்றனர். தற்சமயம் இரண்டு இரயில்கள் மட்டுமே நம் மாவட்டதிலிருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது. இதனால் பல பயணிகள் நெருக்கடியிலும், கூட்ட நெரிசலிலும் சிரமப்பட்டு பயணம் செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது மற்றும் பல பேர் இடம் கிடைக்காமலும் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே இந்நிலை போக்க இராமேஸ்வரம் முதல் சென்னைக்கு (வழி திருவாரூர்) கூடுதல் இரயில்கள் Dr.APJ அப்துல்கலாம் அவ்ர்கள் பெயரில் இயக்க வேண்டும் என்றும் மாவட்ட மக்களின் சார்பாகவும். இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாகவும் தாங்கள் சிபாரிசு செய்ய வேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments