கோட்டைப்பட்டினத்தில் தமுமுக வின் 29-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று நிகழ்ச்சி 

கோட்டைப்பட்டினத்தில் தமுமுக வின் 29-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது 

தமுமுக வின் 29-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு  புதுக்கோட்டை (கிழக்கு)மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிளை சார்பாக 04.09.2023 அன்று கோட்டைபட்டினம் பகுதிகளில்  மாவட்ட தலைவர் வழக்கறிஞர் B.சேக் தாவூதீன் தலைமையில் கொடிகள் ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஜெகதை செய்யது மமக மாவட்ட செயலாளர் அபுசாலிகு ஆகியோர் பல்வேறு இடங்களில் கொடிகளை ஏற்றினார்கள். மாவட்ட மருத்துவ வேவை அணி செயலாளர் MSK முகமது சாலிகு,SMI மாவட்ட செயலாளர் கலந்தர் பாட்ஷா ஒன்றிய தலைவர் ஹாஜாமைதீன்  ஒன்றிய செயலாளர் ரூபி ரபீக் ஒன்றிய பொருளாளர் முகமது ராவுத்தர் மற்றும் கிளை நிர்வாகிகள் சேக் அப்துல்லா,இபுராகிம் உட்பட  பலர் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments