திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் பறப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு -இந்திய அளவில் 4வது இடம்
இந்திய அளவில் ஒட்டுமொத்த வெளிநாட்டு விமான சேவையில் திருச்சி-சிங்கப்பூர் சேவை 21-வது இடத்தையும், சிங்கப்பூருக்கு மட்டுமான விமான சேவையில் திருச்சி 4-வது இடத்தையும் பிடித்துள்ளது.

திருச்சி விமானநிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகள் 8-ம், வெளிநாட்டு சேவைகள் 10-ம் உள்ளன. இதில், வெளிநாட்டு விமான சேவை யில், சிங்கப்பூர் முதலிடத்திலும், மலேசியா 2-வது இடத்திலும் உள்ளன. இதுதவிர, இலங்கை, சார்ஜா, துபாய், குவைத், அபுதாபி, மஸ்கத், தோஹா போன்ற வற்றுக்கு விமான சேவைகள் உள்ளன.

2022-23 நிதியாண்டில், திருச்சி- சிங்கப்பூர் இடையே 4.26 லட்சம் பயணிகள் பயணம் செய்துள் ளனர். நடப்பு நிதியாண்டின் முதல் மாதத்தில்(ஏப்ரல்) 41,660 பேரும், மே மாதம் 47,607 பேரும் பயணம் செய்துள்ளனர்.

மேலும், சிங்கப்பூருக்கு செல்ல ஒரு மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்தால் தான் டிக்கெட் கிடைக் கும் என்ற நிலை உள்ளதால், திருச்சி-சிங்கப்பூர் இடையிலான விமான சேவையை அதிகரிக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடப்பு காலண்டர் ஆண்டின் முதல் காலாண்டில்(ஜன-மார்ச்) திருச்சியிலிருந்து சிங்கப் பூருக்கு 1,18,246 பேரும், 2-வது காலாண்டில்(ஏப்ரல்- ஜூன்), 15.5 சதவீதம் அதிகரித்து, 1,36,589 பேரும் பயணித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஒட்டுமொத்த மாக உள்ள 330 வழித்தடங்களில் முதல் காலாண்டில் 30-வது இடத்தில் இருந்த திருச்சி-சிங்கப்பூர் சேவை, 2-வது காலாண்டில் 21-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இதில், சிங்கப்பூருக்கான 16 வழித்தடத்தில் 4-வது இடத்தில் திருச்சி உள்ளது என இந்திய பயணி கள் விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அடுத்த மாதத் துக்குபிறகுதிருச்சி-சிங்கப்பூர் சேவை அதிகரிக்க இருப் பதால்ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் முதல் 10 இடத் துக்குள் திருச்சி விமானநிலையம் இடம் பெற வாய்ப்புள் ளதாக விமான நிலைய ஆர்வலர்கள் கருத்து தெரி வித்துள்ளனர்.

இதுகுறித்து சர்வதேச விமானநிலையங்களின் ஆய் வாளர் உபயதுல்லா கூறியது: திருச்சி விமான நிலைய வளர்ச்சியில் திருச்சி-சிங்கப்பூர் வழித்தட சேவை முக் கிய பங்காற்றி வருகிறது. நடப்பாண்டில் இந்த வழித்தடத் தில்பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவரு வதால், தொடர்ந்து கூடுதல் விமான சேவை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அக்டோபர் மாதத் துக்கு பிறகு வாரத்தில் ஒரு சேவை சிங்கப்பூருக்கு அளிக்க உள்ளது. எனவே, வரும் காலங்களில் இந்த வழித்தடத்தில் பயணிகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் ஒட்டு மொத்தமாக இந்திய அளவில் முதல் 10 இடத்தில் இடம் பெறுவது உறுதி என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments