புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத குவாரிகள் மீது நடவடிக்கை கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு




புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஜகபர் அலி, மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா லெம்பலக்குடி, வளையன் வயல் உள்ளிட்ட கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் அதிகாரிகள் துணையுடன் சிலர் நடத்தும் கல்குவாரியால் நீர்வரத்து வாய்க்கால்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. வெடிவைத்து கற்களை வெட்டி எடுப்பதால் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. மேலும், சட்டத்துக்கு புறம்பாக நடத்தப்படும் குவாரியால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளுக்கும் தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரோடு அமைத்தல், பாலங்கள் கட்டுதல் மற்றும் அரசு கட்டிட கட்டுமான பணி ஆகியன குவாரி தடையால் பாதிக்கப்பட்டுள்ளன. திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஏற்கனவே குவாரிகள் இல்லை என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, புதுக்கோட்டை கலெக்டர் அனைத்து குவாரிகளையும் ஆய்வு செய்ய வேண்டும். அனுமதி பெற்று முறையாக இயங்கும் குவாரிகள் தொடரலாம். உரிய அனுமதியின்றியும் விதிகளை மீறியும் சட்டத்திற்க்கு புறம்பாக செயல்படும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments