மன்னார்குடி ⇋ திருச்சி ⇋ மானாமதுரை முன்பதிவில்லாத ரயில் 09.09.2023 முதல் காரைக்குடி வரை மட்டுமே இயங்கும். நிரந்தரமாக காரைக்குடி - மானாமதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு



 

 மன்னார்குடி ⇋ திருச்சி ⇋ மானாமதுரை   முன்பதிவில்லா  ரயில் 09.09.2023 முதல் காரைக்குடி வரை மட்டுமே இயங்கும்.  நிரந்தரமாக காரைக்குடி - மானாமதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது - ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது 




காரிடார் பிளாக்

ஓடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்துக்கு பிறகு ரயில்வே வாரியம் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக ரயில்வே தண்டவாளம் பராமரிப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டி ரயில்கள் இயக்கப்படாமல் இருக்கும் நேரத்தை கண்டறிந்து அந்த காலகட்டடத்தை காரிடார் பிளாக் என்று அறிவித்து ரயில் பாதையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது இதற்கு ஏற்றார்வகையில், காரிடார் பிளாக்கை (ரயில் இயங்காத நேரம்) அதிகரிக் கும் வகையில், ரயில்களின் பயண கால அளவை மாற்றம் செய்து வருகிறது.

மன்னார்குடி - திருச்சி - மானாமதுரை

கடந்த 2013 அறிமுகப்படுத்தப்பட்ட மன்னார்குடி-மானாமதுரை டெமு ரயில், நிருவாக காரணகளுக்காக 2 ரயில் எண்களை கொண்ட ரயிலாக தனி தனியாக பிரிக்கப்பட்டு மன்னார்குடி-திருச்சி ஒரு ரயிலாகவும் திருச்சி-மானாமதுரை ஒரு ரயிலாகவும் தற்போது இயங்கிவருகிறது




மன்னார்குடி - திருச்சி - காரைக்குடி 

வரும் 09/09/23 முதல் 06829/30 திருச்சி - மானாமதுரை டெமு இரயில்(தினசரி) நிரந்தரமாக காரைக்குடி வரை மட்டும் இயக்குவதற்கான அட்டவணை வெளியீடு!

வரும் 09/09/2023 முதல் 06829 திருச்சி - காரைக்குடி 

➧திருச்சி- 10:15 am (புறப்படும் நேரம்)
➧குமாரமங்கலம் - 10:29 am
➧கீரனூர் 10:42 am 
➧வெள்ளனூர் - 10:52 am
➧புதுக்கோட்டை-11:02 AM 
➧திருமயம்-11:16 AM
➧செட்டிநாடு - 11.25 AM
➧கோட்டையூர் - 11.31AM
➧காரைக்குடி-12:10 PM (சேரும் நேரம்) 

வரும் 09/09/2023 முதல் 06830 காரைக்குடி - திருச்சி 

➧காரைக்குடி -3:30 PM (புறப்படும் நேரம்)
➧ கோட்டையூர்-3:38 PM
➧ செட்டிநாடு - 3:57 PM
➧திருமயம்-03:55 PM
➧புதுக்கோட்டை-04:10 PM
➧ வெள்ளனூர் - 04: 24 PM
➧கீரனூர்- 04:37 PM
➧ குமாரமங்கலம் - 04:50 PM
➧திருச்சி-05:35 PM (சேரும் நேரம்) 

இதன் மூலம் திருச்சி  புதுக்கோட்டை இரயில் நிலையம் பகலில் தேவகோட்டை, கல்லல், சிவகங்கை, மானாமதுரை செல்லும் நேரடி இரயில் வாய்ப்பு மட்டுமின்றி மானாமதுரையில் கிடைக்கும், ராமேஸ்வரம், மதுரை இணைப்பையும் இழக்கிறது. 

அதுபோல மயிலாடுதுறை - திருவாரூர் - காரைக்குடி ரயிலும்  இராமேஸ்வரம் மதுரை இணைப்பையும் இழக்கிறது

இது குறித்து சிவகங்கையை சேர்ந்த ரயில் ஆர்வலர் சூர்யா பிரகாஷ் கூறியதாவது 

கடந்த 11 (16.04.2012 - 08.09.2023 ) ஆண்டுகளாக சிவகங்கை மற்றும் மானாமதுரை பொதுமக்கள் மதியம் நேரத்தில் இருக்கும் ஒரே ஒரு தொடர் வண்டியால் நாம் பயனடைந்து வந்த நிலையில் இன்று அந்த தொடர்வண்டியை நாம் பறிகொடுத்து விட்டோம்

தொடர்வண்டி எண் : 06829/30 திருச்சி - மானாமதுரை முன்பதிவில்லா விரைவு வண்டி ( வரும் 08.09.2023 அன்று காரைக்குடி மற்றும் மானாமதுரை இடையே தன் சேவையை நிறைவு செய்ய உள்ளது ) வரும் 09.09.2023 முதல் தொடர்வண்டி எண் : 06829/30 திருச்சி - காரைக்குடி முன்பதிவு இல்லா விரைவு வண்டியாக அதாவது திருச்சியிலிருந்து காரைக்குடி வரை மட்டுமே இயங்கும். 

இதனால் தேவகோட்டை ரோடு, கல்லல், பனங்குடி, சிவகங்கை, மானாமதுரை பொதுமக்கள் அனைவருக்கும் பரிச்சியமான பயனுள்ள வண்டியாக இருந்தது. தற்போது இந்த வண்டியை நம்பி இருந்த தேவகோட்டை ரோடு, கல்லல், பனங்குடி, சிவகங்கை, மானாமதுரை பொதுமக்கள் அனைவரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டுள்ளனர் .

இந்த வண்டியை காரைக்குடி மற்றும் மானாமதுரை இடையே ரத்து செய்வதற்கு காரணம் என்ன ?? 

பதில் : இந்திய ரயில்வே வரலாற்றில் மிகவும் மோசமான ரயில் விபத்தான " ஒடிசா ரயில் விபத்திற்கு பிறகு " இந்திய ரயில்வே துறை , இந்தியாவிலுள்ள அனைத்து ரயில் பாதைகளுக்கும் ( 3-HOURS RAIL CORRIDOR BLOCK ) ஒரு நாளில் மூன்று மணி நேரம் அந்தப் ரயில் பாதை மூடப்பட்டு தண்டவாள பராமரிப்பு பணிகள் மற்றும்   சிக்னல் பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். அதன்படி சில வண்டிகளை ரத்து செய்வதற்குரிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் இந்த தேவகோட்டை ரோடு, கல்லல், பனங்குடி, சிவகங்கை, மானாமதுரை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி வந்த இந்த திருச்சி - மானாமதுரை வண்டியும் அந்த பட்டியலில் இருந்தது ( திருச்சி-காரைக்குடி விரைவு வண்டி என்று  காரைக்குடி மற்றும் மானாமதுரை இடையே ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது )

சிவகங்கை மற்றும்  மானாமதுரையில் நல்ல வரவேற்பு பெற்று இருந்த இந்த வண்டி. தற்போது இந்த இரண்டு ஊர்களுக்கும் விடை கொடுக்கப் போகிறது. ரயில்வே துறை மறுபரிசீலனை செய்து அட்டவணையில் மாற்றம் கொண்டு வந்தால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதே சமயத்தில் நல்ல வருவாயும் ரயில்வே துறைக்கு கிடைக்கும்.

இது குறித்து புதுக்கோட்டை ரயில் யூஸர்ஸ் பதிவில் கூறியதாவது 

திருச்சி-மானாமதுரை டெமு ரயிலை காரைக்குடியுடன் நிறுத்தும் முடிவை ரயில் நிருவாகம் கைவிடவேண்டும்!

கடந்த 2013 அறிமுகப்படுத்தப்பட்ட மன்னார்குடி-மானாமதுரை டெமு ரயில், நிருவாக காரணகளுக்காக 2 ரயில் எண்களை கொண்ட ரயிலாக தனி தனியாக பிரிக்கப்பட்டு மன்னார்குடி-திருச்சி ஒரு ரயிலாகவும் திருச்சி-மானாமதுரை ஒரு ரயிலாகவும் தற்போது இயங்கிவருகிறது. இந்த ரயில் 06829/திருச்சி- மானாமதுரை டெமு ரயில் திருச்சியிலிருந்து தினசரி காலை 10:15 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை வழியாக மானாமதுரைக்கு மதியம் 01:20 மணிக்கு செல்கிறது, மறுமார்கத்தில் 06830/மானாமதுரை-திருச்சி டெமு ரயில் மானாமதுரையிலிருந்து தினசரி மதியம் 02:15 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு மாலை 05:30 மணிக்கு வருகிறது. இந்த ரயில் மூலம் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் திருச்சி, கீரனூர், புதுக்கோட்டை, திருமயம், காரைக்குடி போன்ற பகுதிகளிலிருந்து தேவகோட்டை, கல்லல், சிவகங்கை, மானாமதுரை போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் இந்த ரயிலை மதுரை வரை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ள நிலையில் தற்போது காரைக்குடியோடு  நிரந்தரமாக நிறுத்துவதாக ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த முடிவு பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதற்கு ஒவ்வொரு sectionக்கும் காரிடார் பிளாக்(Corriodor Block) யை 3 மணிநேரம் இருக்கவேண்டும் என்பதை அமல்படுத்தற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 3 மணிநேரத்தில் இந்த வித இடையூறுமின்றி தண்டவாள பராமரிப்பு & பிற பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த நேரம் ஒதுக்கப்படுகிறது. இந்த நேரத்தில் வாராந்திர ரயில் இருந்தால் அவைகளுக்கு மட்டும் அந்த 3 மணிநேரத்தில் விதிவிலக்கு அளிக்கப்படும். இதன்படி மானாமதுரை-காரைக்குடி வழித்தடத்தில் காலை 09:30 மணிக்கு பிறகு 02 மணி நேரம் 15 நிமிடங்கள் வரை எந்த ரயில்களுக்கும் கிடையாது. பிறகு 11:45 மணிக்கு காரைக்குடிலிருந்து மானாமதுரை நோக்கி இந்த 06829/திருச்சி-மானாமதுரை உள்ளது. இந்த 3 மணிநேரம் காரிடார் பிளாக்(Corriodor Block) யை அமல்படுத்துவதில் சிக்கலை இந்த டெமு ஏற்படுத்திக்கிறது என்று ரயில்வே நினைப்பதால் இந்த ரயிலை காரைக்குடியோடு நிறுத்தும் முடிவை இரயில்வே வாரியத்தின் ஒப்புதலோடு எடுத்துள்ளது. 

நாம் கூறுவது என்னவென்றால் ஒரு ரயிலை ஒரு பகுதியில் நிரந்தரமாக நிறுத்துவதற்கு பதில் பயணிகளுக்கு பாதிப்பதை ஏற்படுத்தாத வகையில் ரயில் நிர்வாகம் முடிவை எடுக்கவேண்டும். உதாரணமாக திருச்சியிலிருந்து காலை 10:15 மணிக்கு புறப்படும் டெமு ரயில் புறப்படும் நேரத்தை 10:50 என மாற்றலாம். இவ்வாறு 10:50 புறப்பட்டால் காரைக்குடிக்கு இந்த ரயில் வருவதற்கு 12:45 ஆகிவிடும். மேலும் ஒரு 15-20 நிமிடங்கள் காரைக்குடியிலேயே தாமதப்படுத்தி இந்த ரயிலை மானாமதுரை நோக்கி புறப்படச்செய்தலே ரயில்வே துறைக்கு தேவையான 3 மணிநேரம் காரிடார் பிளாக்(Corriodor Block) தாராளமாக கிடைக்கும். இவ்வாறு தாமதப்படுத்தி தான் திருச்சி கோட்டத்தில் திருச்சி-காரைக்கால் டெமு ரயில் இயக்கப்படும் அட்டவணையை ரயில்வே நிருவாகம் சமீபத்தில் வெளியிட்டது. எனவே பயணிகள் நலன் கருதி திருச்சி-மானாமதுரை-திருச்சி டெமு வை காரைக்குடியோடு நிறுத்தும் முடிவை கைவிட்டு பயணிகளுக்கு சாதகமான ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டுகிறோம்

PC Credit: Surya Prakash & Pudukottai Rail Users 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments