சேதுபாவாசத்திரம் அருகே 110 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் ஒருவர் கைது
சேதுபாவாசத்திரம் அருகே 110 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.

ரகசிய தகவல்

கடல்வாழ் அரிய வகை உயிரினங்களை மீனவர்கள் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் கடல் அட்டையும் ஒன்றாகும். இந்த நிலையில் செந்தலைப்பட்டினம் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள கிராம பகுதியில் கடல் அட்டைகளை பதப்படுத்தி வைத்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ் உத்தரவின் பேரில், தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி ஆலோசனையின்படி, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் வனக்காப்பாளர்கள் சபரிநாதன், குமார், மணவாளன், ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய தனிக்குழுவினர் செந்தலைப்பட்டினம் கடற்கரை பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

110 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

இந்த சோதனையின் போது அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பதப்படுத்தப்பட்ட 110 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். கடல் அட்டைகளை வைத்திருந்த சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள ஆலடிக்காடு கிராமத்தை சேர்ந்த பாஸ்கர்(வயது40) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments