கழுத்து பகுதியில் டாட்டூ குத்தியதால் கல்லூரி மாணவர் மரணம் நடந்தது என்ன முழு விவரம்








நீங்கள் டாட்டூ பிரியாக இருந்தால், நிச்சயம் இந்த செய்தி ஒரு எச்சரிக்கை பதிவு ஆகும். பரத் என்ற கல்லூரி மாணவர் டாட்டூ போட்டதால், புண் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவருக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பரத் இவருக்கு வயது 22 கடந்த மாதம் நண்பர்களுடன் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பச்சைக்குத்தும் கடைக்கு சென்ற அவர் தனது கழுத்தில் டாட்டூ குத்திக் கொண்டார்.

சுற்றுலா முடித்து வீடு திரும்பிய நிலையில் டாட்டூ குத்திய இடத்தில் பச்சை புண் ஏற்பட்டு நரம்பு பாதிக்கப்பட்டு கட்டி உருவாகி வலிக்க தொடங்கியது , வலி பொறுக்கமுடியாமல் மருத்துவமனை சென்ற அவர் மருத்துவர்கள் அந்த கட்டியை எடுக்கவேண்டும் என கூறியதை அடுத்து அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து, சீழ்பிடித்திருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர்

மேலும் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுவையில் டாட்டூ குத்திய மகனின் முக்கிய நரம்புக்கு என்ன நடந்தது .. தந்தை கண்ணீர் பேட்டி

பெரம்பலூர்: டாட்டூ குத்திய கல்லூரி மாணவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து அவருடைய தந்தை பேட்டி அளித்துள்ளார்.

பெரம்பலூரை சேர்ந்தவர் பரத் (22). கல்லூரி மாணவரான இவர் தனது நண்பர்களுடன் 20 நாட்களுக்கு முன்பு புதுவைக்கு சென்றுள்ளார். அங்கு கடற்கரை, அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தார்.

ஒரு நாள் புதுச்சேரி கடை வீதியில் நண்பர்களுடன் சென்ற போது பச்சை குத்தும் கடையை பார்த்துள்ளார். அவருக்கு பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. இதையடுத்து அங்கு தனது கழுத்து பகுதியில் நங்கூரம் படத்தை டாட்டூவாக போடுமாறு அதன் மாதிரியையும் காட்டினார்.

டாட்டூ போட்டுக் கொண்டு ஊர் திரும்பிய பரத்திற்கு டாட்டூ குத்திய பகுதியில் புண் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நரம்பு பாதிக்கப்பட்டதுடன் கையின் அக்குள் பகுதியில் நெரிகட்டிக் கொண்டது. இதனால் வலி தாங்க முடியாமல் தவித்த அவரை பெற்றோர் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சீழ்பிடித்திருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றிவிட்டனர். இதையடுத்து அவரது உடல்நிலை மோசமடைந்தது. அங்கிருந்த மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரத்தை பரிசோதித்த மருத்துவர்கள், டாட்டூ குத்தியதால் அந்த இடத்தில் ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்களின் (பிளேட்லெட்) எண்ணிக்கை குறைந்துவிட்டது.

அவருக்கு குறைந்த ரத்த அழுத்தமும் ஏற்பட்டிருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியும் இல்லை. இதனால் அவரது உடல் தற்போது சிகிச்சைக்கு ஒத்துழைக்காது என தெரிவித்துவிட்டனர். இதையடுத்து பரத் தஞ்சை மருத்துவமனையில் பரத் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருடன் டாட்டூ குத்திக் கொண்ட மற்ற நண்பர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து பரத்தின் தந்தை பழனிசாமி கூறுகையில், டாட்டூ மையில் இருந்த ரசாயனம் முக்கிய நரம்பில் இறங்கியதால் பரத் பாதிக்கப்பட்டார் என கண்ணீர் மல்க தெரிவித்தார்

டாட்டூ கலைஞர்கள் அலார்ட்

இதனிடையே சர்க்கரை நோய் பாதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் 'டாட்டூ' குத்திக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் டாட்டூவால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு தோல் நோய் மருத்துவரை உடனடியாக பார்க்க வேண்டும் என்றும் டாட்டூ கலைஞர்கள் எச்சரிக்கிறார்கள்.

மருத்துவர்கள் வார்னிங்:

இதனிடையே மருத்துவர்கள் கூறும் போது, டாட்டூக்களில் பயன்படுத்தப்படும் ரசாயன மைகளால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு அதிகம். மேலும் நோய் தொற்று பாதிப்புகள் ஏற்படக்கூடும். குறிப்பாக, காசநோய், பால்வினை நோய், எய்ட்ஸ் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தோலில் தழும்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்றும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments