அண்ணா, பெரியார் பிறந்தநாளையொட்டி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தகவல்
அண்ணா, பெரியார் பிறந்தநாளையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடைபெறுகிறது.

பேச்சுப்போட்டி

அண்ணா, பெரியார் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடைபெறுகிறது. அதன்படி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பள்ளி பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள் காஞ்சித்தலைவன், அண்ணாவும் பெரியாரும், தமிழும் அண்ணாவும், எழுத்தாளராக அண்ணா, தென்னாட்டு பெர்னாட்ஷா. கல்லூரி பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள் அண்ணாவும் மேடைப்பேச்சும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய்மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.

பெரியார் பிறந்தநாள் பள்ளி பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள் வெண்தாடி வேந்தர், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன், பெரியாரின் சமூக சீர்திருத்தங்கள். கல்லூரி பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள் பெரியாரும் பெண் விடுதலையும், சுயமரியாதை இயக்கம், தெற்காசியாவின் சாக்ரடீஸ், தன்மான பேரொளி, தந்தை பெரியாரின் சமூகநீதி சிந்தனைகள்.

பரிந்துரை கடிதம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் (ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலிருந்தும் ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் இருவர் மட்டும்) இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்கலாம். பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரிடம் உரிய படிவத்தில் பரிந்துரை கடிதம் பெற்று தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு மின்னஞ்சலில் (pdkttamilthai@gmail.com) அனுப்பிட வேண்டும். போட்டி நடைபெறும் இடம் மற்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ, வாட்ஸ்-அப்பிலோ (தொலைபேசி எண் 04322-228840) தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments