திருச்சி - இராமேஸ்வரம் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் 09-09-2023 முதல் 30-09-2023 வரை ரயில் சேவைகளில் மாற்றம்





தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக புதுக்கோட்டை காரைக்குடி சிவகங்கை மானாமதுரை பரமக்குடி இராமநாதபுரம் வழியாக செல்லும் திருச்சி - இராமேஸ்வரம் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் 09-09-2023 முதல் 30-09-2023 வரை  ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.




திருச்சி - இராமநாதபுரம்  (இராமேஸ்வரம்)

வண்டி எண். 16849 திருச்சிராப்பள்ளி - ராமநாதபுரம் (ராமேஸ்வரம்) முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் திருச்சிராப்பள்ளி சந்திப்பில் இருந்து 07.05 மணிக்கு புறப்படுகிறது. 

2023 செப்டம்பர் 9, 11, 12, 13, 14, 16, 18, 19, 20, 21, 23, 25, 26, 27, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மானாமதுரை  - ராமநாதபுரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராமநாதபுரம் வரை ரயில் இயக்கப்படும்

இராமநாதபுரம் (இராமேஸ்வரம்)  - திருச்சி 

வண்டி எண். 16850 ராமநாதபுரம் (ராமேஸ்வரம்)- திருச்சிராப்பள்ளி சந்திப்பு முன்பதிவு செய்யப்படாத எக்ஸ்பிரஸ் ராமநாதபுரத்தில் இருந்து 15.35 மணிக்கு புறப்படுகிறது. 

இந்த ரயில் மானாமதுரை சந்திப்பில் இருந்து 16.35 மணிக்கு தனது பயணத்தை தொடங்கும். செப்டம்பர் 2023 9, 11, 12, 13, 14, 16, 18, 19, 20, 21, 23, 25, 26, 27, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில். ராமநாதபுரம் - மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்  இராமநாதபுரத்தில் இருந்து புறப்படும்

புதிய பாம்பன் பாலம் பணிகள் 

குறிப்பு : திருச்சி - இராமேஸ்வரம் - திருச்சி முன்பதிவுல்லாத ரயில் புதிய பாம்பன் பாலம் பணிகள் காரணமாக கடந்த சில மாதங்களாக இராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது, இராமநாதபுரத்தில் இருந்து புறப்படுகிறது குறிப்பிடத்தக்கது

செய்தி சுருக்கம் (News Summary): 
 
தண்டாவள பராமரிப்பு காரணமாக, திருச்சி - இராமேஸ்வரம் - திருச்சி  முன்பதிவில்லாத விரைவு ரயில் 09/09/2023 முதல் 30/09/2023 வரை வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களை கவிர மற்ற நாட்களில் மானாமதுரை வரை மட்டுமே இயங்கும். மானாமதுரையில் இருந்தே புறப்படும்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments