வைகை ஆறும் கடலும் இணையக்கூடிய ஆற்றாங்கரை கடற்கரை பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் இராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் ஊர் மக்கள் கோரிக்கை




வைகை ஆறும் கடலும் இணையக்கூடிய  ஆற்றாங்கரை கடற்கரை பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் இராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 
 
09.09.2023 அன்று இராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு பா.விஷ்ணு சந்திரன்.இ.ஆ.ப அவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் செ.முஹம்மது அலி ஜின்னா அவர்களுடன் ஆற்றங்கரை ஊராட்சியில் ஆய்வுப் பணி மேற்கொண்டார் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று வைகை ஆறும் கடலும் இணையக்கூடிய முகத்துவார பகுதிக்கு சென்று நேரில் பார்வையிட்டார்

மீனவர்கள் தூண்டில் வளைவு பாலம், மேற்குப் பகுதியில் ஆழப்படுத்தி கற்கள் அமைத்தால் படகு எளிதில் சென்று வரும் போன்ற கோரிக்கைகள் கொடுக்கப்பட்டது

இந்நிகழ்வில் மண்டபம் அரசு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலர் கண்ணன் உட்பட மீனவ மக்கள் ஏராளமான இருந்தர்கள்....

09.09.2023 அன்று இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் ஆற்றங்கரை ஊராட்சி கிராம மாவட்ட ஆட்சித் தலைவர் திரு பா.விஷ்ணு சந்திரன்.இ.ஆ.ப.,அவர்கள் மீனவர்கள் மற்றும் ஊர் பொதுமக்களின் கோரிக்கையை கேட்க வருகை புரிந்தார்

ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் செ.முஹம்மது அலி ஜின்னா மற்றும் அனைத்து சமுதாய தலைவர்கள் வரவேற்றனர்

ஊரின் பிரதான கோரிக்கையான வைகை ஆறும் கடலும் இணையக்கூடிய முகத்துவாரத்தில் மேற்கு பகுதியில் கற்கள் அமைக்க கோரியும், சுற்றுலா சம்பந்தமான கோரிக்கையும், கடற்கரையில் பொதுக் கிணறு இரண்டு அமைக்க கோரி,பேருந்து முறையாக வருவதில்லை கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த கூறி,ரேஷன் கடையில் பொருள்கள் வினியோகம் மற்றும் புதிய குடிநீர் குழாய் இணைப்பு,சாலை வசதி போன்ற ஏராளமான கோரிக்கைகள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் வைக்கப்பட்டது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்

நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை ஊராட்சி செயலாளர் பி.கண்ணன் செய்தார்கள்.... 

இந்நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள்,ஆற்றங்கரை கிராம நிர்வாக அதிகாரி மற்றும் மண்டபம் ஒன்றிய அரசு அதிகாரிகள் மற்றும் இந்து முஸ்லீம் கிறிஸ்தவ சமூகத் தலைவர்கள் இளைஞர்கள் கிராம பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் கள்....

தகவல்;ஊராட்சி மன்ற அலுவலகம்,ஆற்றங்கரை



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments