அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் குப்பைகள் எரிக்கப்படுவதால் புகை மூட்டம் வாகன ஓட்டிகள் அவதி
அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் குப்பைகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

கிழக்கு கடற்கரை சாலை

அதிராம்பட்டினத்தில் இருந்து முத்துப்பேட்டை செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில், தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

கருங்குளம் செல்லும் சாலை ஓரத்தில் மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டித் தீ வைக்கின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது.

புகைமூட்டம்

கிழக்கு கடற்கரை சாலை ஓரங்களில் அதிக அளவில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு, மலைபோல கிடக்கின்றன. சாலை முழுவதும் பரவும் புகையால், வாகன ஓட்டிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகனங்களுக்கு கண்எரிச்சல் ஏற்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதை தடுக்க வேண்டும். அதேபோல், கோழி கழிவுகள், இறைச்சி கழிவுகள் போன்றவற்றை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments