உப்பூர், திருப்பாலைக்குடியில் இருந்து வெளியூர்களுக்கு லாரி மூலம் உப்பு மூடைகள் அனுப்பி வைப்பு
உப்பூர், திருப்பாலைக்குடியில் உற்பத்தி செய்யப்படும் உப்பு மூடை, மூடையாக லாரிகளில் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

உப்பு உற்பத்தி

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி அருகே வாலிநோக்கம், திருப்புல்லாணி, ஆனைகுடி, கோப்பேரிமடம், உப்பூர், திருப்பாலைக்குடி, சம்பைபத்தநேந்தல் உள்ளிட்ட பல ஊர்களில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

ஆண்டுதோறும் கோடை கால சீசன் தொடங்கியதும் மார்ச் மாதத்தில் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் தொடங்கும். பருவமழை சீசன் தொடங்குவதற்கு முன்பாக உப்பு உற்பத்தி செய்யும் சீசன் முடிவடைந்து விடும். இந்த நிலையில் இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து மிக அதிகமாகவே இருந்து வருவதால் உப்பு உற்பத்தியும் அதிகமாக இருந்து வருகின்றது.

வெளியூர்களுக்கு செல்லும் உப்பு மூடைகள்

திருப்பாலைக்குடி, உப்பூர், சம்பை உள்ளிட்ட ஊர்களில் உப்பள பாத்திகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் உப்பு பாத்தி அருகே மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அதுபோல் இவ்வாறு குவித்து வைக்கப்பட்டுள்ள உப்புகள் கடலூர், சிதம்பரம், திருச்சி, மணப்பாறை உள்ளிட்ட பல ஊர்களுக்கு அனுப்புவதற்காக தொழிலாளர்கள் அதை 50 கிலோ மூடைகளாக பேக்கிங் செய்து லாரிகளில் ஏற்றி வெளியூருக்கு அனுப்பும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு உற்பத்தியும் அதிகமாக


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments