அஜ்மீர்-ராமேஸ்வரம் 'ஹம்சபார்' ரயில் 25-09-2023 முதல் புதுக்கோட்டை & இராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.







மானாமதுரை, திருச்சி,சென்னை எழும்பூர், விஜயாவாடா, நாக்பூர், போபால், வழியாக  இராமேஸ்வரம் - அஜ்மீர் வாரந்திர ஹம்சாபர் ரயில் இயக்கப்படுகிறது 

இராமேஸ்வரத்தில் இருந்து இராஜஸ்தான் மாநிலம் அஜீமீர்  வரை வாரந்திர ஹம்சாபர் ரயில்  (வண்டிஎண் 20973/20974)இயக்கப்பட்டு வருகிறது. 

இந்த ரயில் மூலம் , தமிழ்நாடு ஆந்திரா மஹாராஷ்டிரா மத்திய பிரதேசம் ராஜஸ்தான் மாநிலம் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இராமேஸ்வரம் - அஜ்மீர் 

இந்த ரயில் ஒவ்வொரு வாரமும் இராமேஸ்வரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை இரவு 10.55 மணிக்கு அஜ்மீர் வந்தடையும்.

அஜ்மீர் - இராமேஸ்வரம் 

மறுமார்க்கமாக அஜ்மீரில் இருந்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 
10.20 மணிக்கு புறப்படும் ரயில் திங்கட்கிழமை 11.00  மணிக்கு இராமேஸ்வரம் சென்றடையும்.

இந்த ரயில்கள் மானாமதுரை திருச்சி சென்னை எழும்பூர், விஜயாவாடா  நாக்பூர், போபால்,   வழியாக இயங்கி வருகிறது.

20973/94 அஜ்மீர்-ராமேஸ்வரம்-அஜ்மீர் 'ஹம்சபார்' ரயில் இனி புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்லும். 

வரும் 25/09/23 முதல்
20973/அஜ்மீர்-ராமேஸ்வரம் ஹம்சபார் ரயில்

➧அஜ்மீர்- 08:20 pm(சனி)
➧விஜயவாடா- 02:40 am(திங்கள்)
➧சென்னை எழும்பூர்- 09:55 am(திங்கள்)
➧புதுக்கோட்டை- 03:58/04:00 pm(திங்கள்)
➧ராமநாதபுரம்- 06:43 pm(திங்கள்)  
➧ராமேஸ்வரம்- 09:00 pm(திங்கள்)❌

வரும் 26/09/23 முதல்
20974/ராமேஸ்வரம்-அஜ்மீர் ஹம்சபார் ரயில்

➧ராமேஸ்வரம்- 10:45 pm(செவ்)❌
➧ராமநாதபுரம்- 11:45 pm(செவ்)  
➧புதுக்கோட்டை- 01:48/01:50 am(புதன்)
➧சென்னை எழும்பூர்- 08:25 am(புதன்)
➧விஜயவாடா- 04:00 pm(புதன்)
➧அஜ்மீர்-10:55 pm(வியாழன்)

குறிப்பு: தற்போது இந்த ரயில் பாம்பன் பாலம் பணிகள் காரணமாக ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

அஜ்மீர்-ராமேஸ்வரம் ஹம்சபார் ரயிலுக்கு புதுக்கோட்டை நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. அது பற்றி சற்று விளக்கமாக இந்த கட்டுரையில் காணலாம்!

கடந்த அக்டோபர் 02, 2018 காந்தி ஜெயந்தி அன்று ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரிலிருந்து பில்வாரா, போபால், விஜயவாடா, சென்னை எழும்பூர் வழியாக ராமேஸ்வரத்திற்கு இந்த ரயிலின் முழுசேவை தொடங்கப்பட்டது. அறிமுக சேவை மட்டும் #லக்ஷ்மிபாய்_நகர் ரயில் நிலையத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு அன்றைய லோக் சபை சபாநாயகர் 'சுமித்ரா மகாஜன்' அவர்கள் 27 செப் 2018 இல் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.  ராஜஸ்தான் மாநிலம் தொடங்கி மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலம் வழியாக வந்து  சென்னை வழியாக தமிழ்நாட்டிற்குள் இந்த ரயில் நுழைகிறது. ராமேஸ்வரம் - திருச்சி ரயில் பாதைக்கு இடைப்பட்ட ரயில் நிலையங்களில் மானாமதுரை சந்திப்பில் மட்டுமே இந்த ரயில் இதுவரை நின்று சென்றுகொண்டிருந்தது.  கிட்டத்தட்ட அறிமுகப்படுத்தப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ரயிலுக்கு புதுக்கோட்டைக்கு 2 நிமிடங்கள் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. இதன்மூலம் புதுக்கோட்டை காட்லயன்(திருச்சி-விருத்தாச்சலம்- விழுப்புரம்)  வழியாக சென்னை எழும்பூர் செல்லும் முதல் வாராந்திர ரயிலை பெற்றுள்ளது. விரைவில் இந்த ரயில் ஜெய்ப்பூர் வழியாக பஞ்சாப் மாநிலம் பிரோஸ்ப்பூர் ரயில் நிலையம் வரை நீடிப்பு செய்யப்படவுள்ளது. நேரடி ரயில் இணைப்பே இல்லாத ராஜஸ்தான், மத்தியபிரதேச மாநிலங்களுக்கும் நீடிப்பு செய்யப்படப்போகும் பஞ்சாப் மாநிலம் வரை  நேரடி ரயில் இணைப்பு புதுக்கோட்டை பெற்றுள்ளது. 

அஜ்மீர்-ராமேஸ்வரம் ஹம்சபார் ரயிலின் சிறப்பம்சங்கள்:

1. ஹம்சபார் என்பது உருது மொழி சொல்லாகும் 
அர்த்தம்: Co-Passenger(சக பயணி)

2. 2790கிமீ தோற்றத்தை, 52 மணிநேரத்தில் பயணிக்கிறது 

3. சராசரி வேகம்: 57km/hr 

4. வடமேற்கு ரயில்வே மண்டலம் இந்த ரயிலை இயக்குகிறது.

5. பெட்டிகள் எண்ணிக்கை: 18+2
 ➥3 AC-16
 ➥SL - 01
 ➥Pantary Car- 01
 ➥EG - 02
முன்பதிவில்லா(UR) பெட்டிகள் இந்த ரயிலில் கிடையாது.

6.வகை: premium 

7. அஜ்மீர் இருந்து பிரதி சனி இரவு 08:20 மணிக்கும், 
ராமேஸ்வரத்திரலிருந்து பிரதி செவ். இரவு 10:45 மணிக்கும் 
இந்த ரயில் புறப்படுகிறது.

8. நிறுத்தங்கள்: 28+02=30(புதுக்கோட்டை உட்பட)

வரும் 25/09/23 திங்கள் முதல் 20973/அஜ்மீர்-ராமேஸ்வரம் ஹம்சபார் ரயில் புதுக்கோட்டைக்கு மாலை 03:58 மணிக்கு வந்து 04:00 மணிக்கு புறப்பட்டும், வரும் 27/09/23 முதல் 20974/ராமேஸ்வரம் - அஜ்மீர் ஹம்சபார் ரயில், செவ்வாய் இரவு 01:48 மணிக்கு வந்து 01:50 மணிக்கு(புதன் கணக்கில் வரும்) புறப்பட்டும் இந்த ரயில் செல்லவிருகிறது.புதுக்கோட்டை வாசிகள் இருமார்கங்களிலும் இந்த ரயிலை ஆக்கபூர்மாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்



News & Photos Credit : Pudukottai Rail Users 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments