மகளிர் உரிமைத்தொகை பெற ஆதார் எண் இணைப்பு இல்லை: வங்கியில் புதிய கணக்கு தொடங்க சொல்வதால் பொதுமக்கள் அவதி




மகளிர் உரிமைத்தொகை பெற வங்கி கணக்கில் ஆதார் எண் இணைப்பு இல்லை இன்று கூறுவதால் புதிய கணக்கு தொடங்க சொல்வதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

மகளிர் உரிமைத்தொகை

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை பெற கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் ரூ.1,000 வழங்குவதற்கு உத்தரவிட்டு வீடுதோறும் விண்ணப்பங்கள் வழங்கி இணையதளம் வழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதற்கான பணிகளை வருவாய்த்துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு முழுமையாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் விதமாக கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், தன்னார்வலர்கள் வீடுவீடாகச் சென்று விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மையை சரி பார்த்து வருகின்றனர்.

வங்கிகளுக்கு அலையும் பெண்கள்

கிராமங்கள் தோறும் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஒரு வாரமாக அதிகாரிகளால் விண்ணப்பம் சரி பார்க்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு சிலர் தொலைபேசியில் அழைத்து உங்கள் வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்கப்படவில்லை. அதனால் உரிமைத் தொகை கிடைக்காது. அதனால் தபால் நிலையத்தில் உடனே ஆதார் இணைத்து கணக்கு தொடங்க வேண்டும். அதற்கு ரூ.300 கொண்டு வரவேண்டும் என கூறியதை தொடர்ந்து தபால் நிலையங்களில் புதிய கணக்கு தொடங்கி வருகின்றனர்.

அதேபோல அதே பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் புதிய கணக்கு தொடங்க வேண்டும், அப்போது தான் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என்றும் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கடந்த சில நாட்களாக   பெண்கள் தபால் நிலையங்களுக்கும், கூட்டுறவு வங்கிகளுக்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர். இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

தெளிவாக சொல்லலாம்

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மகளிர் உரிமைத்தொகை பெற குறிப்பிட்ட வங்கிகளில் தான் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சொல்லவில்லை. ஏதேனும் ஒரு வங்கியில் கணக்கு இருந்தால் போதும் என்றே கூறியுள்ளனர். தற்போது அனைவருக்கும் ஏதோ ஒரு வங்கியில் கணக்கு இருக்கும் நிலையில் அந்த வங்கி கணக்குகளில் ஆதார் எண் இணைப்பு காட்டவில்லை என்பதற்காக புதிய வங்கி கணக்கு தொடங்கச் சொல்வதால் விபரமறியாத கிராமத்து பெண்கள் அங்கும் இங்குமாக அலைகிறார்கள். அதனால் விண்ணப்பதாரர்களிடம் ஏற்கனவே உள்ள வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க சொல்லலாம். இதை விட்டு புதிய கணக்கு தொடங்குவதால் கிராம பெண்களிடம் குழப்பம் தான் ஏற்படுகிறது என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments