எர்ணாகுளம்- ஹஜ்ரத் நிஜாமுதீன் ரயில் LHB பெட்டிகளாக மாற்றம் வரும் 23ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது




கோவை, சேலம் வழியே இயக்கப்ப டும் எர்ணாகுளம்-நிஜா முதீன் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் அனைத்தும் வரும் 23ம் தேதி முதல் எல்எச்பி பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகி றது.

நாடு முழுவதும் நீண்ட தூரம் இயங்கும் ரயில்களின் பெட்டிகளை அதிக பாதுகாப்பு அம் சங்கள் நிறைந்த எல்எச்பி பெட்டிகளாக மாற்றும் பணியை ரயில்வே நிர் வாகம் மேற்கொண்டு வருகிறது. அதாவது, வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில்களின் பெட்டிகள் அனைத்தும் ஐசிஎப் பெட் டிகளாக இருக்கும். அதில் இருந்து மாறுபட்டு. ஜெர் மன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் 'லிங்க் ஹாப்மேன் புஷ்' என்னும் எல்எச்பி பெட்டிகள், அதிக பாதுகாப்பு அம்சங் கள் நிறைந்தது.

120 கிலோ மீட்ட ருக்கு மேல் வேகமாக ரயிலை இயக்கும்போ தும், அதிகளவு அதிர்வு கள் இருக்காது. பயோ டாய்லெட் வசதி, புதிய வடிவமைப்பு கொண்ட இருக்கைகள் கொண்ட வையாக இப்பெட்டி கள் உருவாக்கப்பட் டிருக்கிறது தற்போது நீண்டதூரம் இயங்கும் பெரும்பாலான ரயில் கள். எல்எச்பி பெட்டி கள் கொண்ட ரயிலாக மாற்றப்பட்டிருக்கிறத.

அந்தவகையில் கோவை, சேலம் வழியே இயக்கப்படும் எர்ணா குளம்-நிஜாமுதீன் எக்ஸ் பிரஸ் (1264.5) வரும் 23ம் தேதி முதல் எல்எச்பி பெட்டிகள் கொண்டரயிலாக மாற்றி இயக் கப்படுகிறது மறுமார்க் சுத்தில் நிஜாமுதீன்-எர் ணாகுளம் எக்ஸ்பிரஸ் (12646) வரும் 26ம் தேதி முதல் எல்எச்பி பெட்டி கள் கொண்ட ரயிலாக மாற்றி இயக்கப்படவுள் ளது.

இந்த ரயிலில் இரண்டடுக்கு ஏசி பெட்டி-2, மூன்றடுக்கு ஏசி பெட்டி-5. இரண் டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி-9, முன் பதிவில்லா பொது பெட்டி-3. மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி-1. லக் கேஜ் பெட்டி-1, என மொத்தம் 21 பெட்டிகள், எல்எச்பி பெட்டிகளாக இணைக் கப்பட்டு இயக்கப்படுகி றது. இத்தகவலை தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரி வித்துள்ளது.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments