பிறப்புச் சான்றிதழ் என்பது புதிதாகப் பிறந்த குழந்தையின் பிறந்த தேதி, பிறந்த இடம், பாலினம் மற்றும் பெயரை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆவணமாகும். பிறப்புச் சான்றிதழ் ஒரு நபரின் சட்டபூர்வமான இருப்பை நிரூபிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு கூறி வந்த நிலையில், அனைத்து வகையான பதிவுகளுக்கும் பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்தலாம் என மத்திய உள்துறைஅமைச்சகம் அறிவித்து உள்ளது.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 மூலம் கல்வி நிறுவனத்தில் சேர்க்கை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஆதார் எண், திருமண பதிவு ஆகியவற்றிற்கு பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்த அனுமதிக்கிறது. இந்த புதிய நடைமுறை, அக்டோபர் 1 முதல் அரசு வேலை அமலுக்கு வருகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர், இது தொடர்பாக செப்டம்பர் 13ம் தேதியில் வெளியிட்டுள்ள அரசாணையில், அனைத்து வகையான பதிவுகளுக்கும் பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிலையங்களில் சேரவும், டிரைவிங் லைசன்ஸ் பெறவும், ஆதார் எண் பெறுவதற்கான பதிவு, திருமண பதிவு, அரசு பணிகளில் சேர்வது போன்ற பல விஷயங்களுக்கு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்த முடியும். இதற்கான நடைமுறை வரும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. கல்வி நிறுவனத்தில் சேருதல், ஓட்டுநர் உரிமம் வழங்குதல், வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஆதார் எண், திருமணப் பதிவு அல்லது அரசுப் பணி நியமனம் உள்ளிட்ட பல பணிகளுக்கு பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்த பிறப்பு மற்றும் இறப்பு (திருத்தம்) சட்டம், 2023 மசோதா அனுமதிக்கிறது.
பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகளின் தேசிய அளவில் தரவுகளை இந்திய ரெஜிஸ்ட்ரார் ஜெனரலுக்கு (Registrar General of India ) அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தலைமைப் பதிவாளர்கள் (மாநிலங்களால் நியமிக்கப்பட்டவர்கள்) மற்றும் பதிவாளர்கள் (உள்ளூர் பகுதி அதிகார வரம்பிற்கு மாநிலங்களால் நியமிக்கப்பட்டவர்கள்) பதிவுசெய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய தரவை தேசிய தரவுத்தளத்துடன் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளனர். தலைமைப் பதிவாளர் மாநில அளவில் இதே போன்ற தரவுத்தளத்தை பராமரிக்க வேண்டும்.
பிற தரவுத்தளங்களைத் தயாரிக்கும் அல்லது பராமரிக்கும் மற்ற அதிகாரிகளுக்கு தேசிய தரவுத்தளம் கிடைக்கப்பெறலாம் என்று புதிய சட்டம் கூறுகிறது. இத்தகைய தரவுத்தளங்களில் மக்கள் தொகைப் பதிவேடு, வாக்காளர் பட்டியல்கள், ரேஷன் கார்டுகள் மற்றும் அறிவிக்கப்பட்ட பிற தேசிய தரவுத்தளங்கள் ஆகியவை அடங்கும். தேசிய தரவுத்தளத்தை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் பெற வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.