முத்துப்பேட்டையில் செகந்திராபாத் (ஹைதராபாத்) - இராமநாதபுரம் வாரந்திர சிறப்பு ரயிலுக்கு உற்சாக வரவேற்பு
 முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் செகந்திராபாத் (ஹைதராபாத்)  - இராமநாதபுரம்  வாரந்திர சிறப்பு ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்..

திருவாரூர் - காரைக்குடி

தமிழகத்தில் மிகவும் பழமையான மீட்டர்கேஜ் பாதையாக  திருவாரூர்  - காரைக்குடி வழிப்பாதை இருந்தது. இந்த வழிப்பாதையில் மீட்டர் கேஜ் காலத்தில் கம்பன் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தன. இந்த வழிப்பாதையில் நடந்த அகல ரெயில் பாதை பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த வருடம் ஆகஸ்ட் 24ம் தேதி செகந்திராபாத்தில் இருந்து சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை, அறந்தாங்கி காரைக்குடி வழியாக ராமேசுவரத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது..

ஆரம்ப முதல் இந்த ரயிலுக்கு முத்துப்பேட்டை நிறுத்தம் இல்லை  14 செப்டம்பர் 2023 முதல் முத்துப்பேட்டையில் செகந்திராபாத் - இராமநாதபுரம் வாரந்திர சிறப்பு ரயில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்து இருந்தது...

இந்நிலையில்  நேற்று 14 செப்டம்பர் 2023 வியாழக்கிழமை மாலை 06.50 மணிக்கு முத்துப்பேட்டைக்கு வந்த செகந்திராபாத்- இராமநாதபுரம் வாரந்நிர சிறப்பு ரயிலுக்கு முத்துப்பேட்டை ரயில் உபயோகிப்பார்கள் சங்கம் சார்பில்  உற்சாக வரவேற்பு அளித்தனர் ரயில் ஓட்டுநர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ரயில் சங்கத்தினர் ரயில் ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செகந்திராபாத் - இராமநாதபுரம்

செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் (07695) ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் செகந்திராபாத்தில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை இரவு 11.45 மணிக்கு ராமநாதபுரம் ரயில் நிலையத்திற்கு செல்லும். 

இராமநாதபுரம் -  செகந்திராபாத்

மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் (07696) ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 09.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு செல்லும்.

முத்துப்பேட்டை வரும் நேரம் 

வண்டி எண் 07695 செகந்திராபாத்-  ராமநாதபுரம்   வாரந்திர சிறப்பு ரயில் ஒவ்வொரு வாரமும்  வியாழக்கிழமை தோறும் முத்துப்பேட்டை ரயில் நிலையம் மாலை 6-00 மணிக்கு வந்து மாலை 6-01 க்கு புறப்படும்.

வண்டி எண் : 07696 இராமநாதபுரம் - செகந்திராபாத் செல்லும் வாரந்திர சிறப்பு ரயில் ஒவ்வொரு வாரமும்  வெள்ளிக்கிழமை தோறும் முத்துப்பேட்டை ரயில் நிலையம் பிற்பகல் 1-41 மணிக்கு வந்து 1-42 மணிக்கு புறப்படும்

எங்கே எங்கே நின்று செல்லும் ??

இந்த ரயில்களானது நலகொண்டா, மிரியால் குடா, சட்டெனப்பள்ளி, குண்டூர், தெனாலி, பாபட்லா, ஓங்கோல், காவாலி, நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி,
முத்துப்பேட்டை 
அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


செகந்திராபாத் - இராமநாதபுரம் - செகந்திராபாத் வாரந்திர சிறப்பு ரயில் அட்டவணை 


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments