உலக கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு மீமிசல் கடற்கரை பகுதியில் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி
உலக கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடற்கரை பகுதியில் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தேசிய பசுமை படையும் இணைந்து மீமிசல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடற்கரையில் உள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றினார். மேலும் அப்பகுதியில் உள்ள மீனவர்களுக்கு கடல் பகுதியினை எவ்வாறு தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட உதவி பொறியாளர் வெங்கட் சுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தமிழ்ச்செல்வன், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments