கோட்டைப்பட்டினம் அருகே பாய்மர படகு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், கோட்டைப்பட்டினம் அருகே தெற்கு புதுக்குடி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் பாய்மர படகு போட்டி நடைபெற்றது. போட்டியில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 25 படகுகள் கலந்து கொண்டன. போட்டியில் கலந்து கொண்ட படகுகள் பந்தய எல்லை தூரத்தை கடந்து திரும்ப கரைக்கு வந்தன.

இதில் முதல் பரிசு ரூ.50 ஆயிரத்தை ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணை ஊரை சேர்ந்த படகும், இரண்டாம் பரிசு ரூ.40 ஆயிரத்தை ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதுக்குடியை சேர்ந்த படகும், மூன்றாம் பரிசு ரூ.30 ஆயிரத்தை ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி புதுக்குடியை சேர்ந்த படகும், நான்காம் பரிசு ரூ.20 ஆயிரத்தை ராமநாதபுரம் மாவட்டம் நம்புதலை சேர்ந்த படகும் தட்டிச் சென்றன. பின்னர் வெற்றி பெற்ற படகு உரிமையாளர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது. பாய்மர படகு போட்டியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து கண்டு களித்தனர்.

இதில் மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் கவிதா ஸ்ரீகாந்த் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள், மீனவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments