ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்




ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் உமாதேவி தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத்தலைவர் பிரியா குப்பு ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அமரடக்கி சரண், மீமிசல் ரமேஷ், ஒக்கூர் அல்லி முத்து ஆகியோர் தமிழக முதல்-அமைச்சரால் காலை சிற்றுண்டி திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து தட்டு, டம்ளர் வழங்கியதாக கணக்கு உள்ளது. அந்த திட்ட தொடக்க விழாவிற்கு எங்களுக்கு அழைப்பு இல்லை என்று கூறினார்கள். மேலும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் எங்களிடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் நீங்களாக வழங்கி விட்டீர்களா, எங்களுக்கு கூறக்கூடாதா என்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் கலெக்டர் திடீர் என்று ஆரம்பிக்க சொன்னதாலும், நாள் குறைவாக இருந்ததால் யாரிடமும் சொல்லமுடியவில்லை என்று வட்டார வளர்ச்சி அலுவலர் கூறினார். புண்ணிய வயல் ஒன்றிய குழு உறுப்பினர் செந்தில்குமரன்:- எங்கள் பகுதியில் மின்மாற்றிக்கு இரு மின்கம்பங்கள் நட வேண்டும், அதனை உடனடியாக நட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 
 
பொன்பேத்தி உறுப்பினர் சுந்தரபாண்டியன்:- நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ஆர்.ஆர். திட்டத்தில் வரவேண்டிய சாலைகளை நமது பகுதிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மீமிசல் உறுப்பினர் ரமேஷ்:- எங்கள் பகுதியில் புதிதாக இணைக்கப்பட்ட குழாய் பணி இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது அதற்குள்ள நிதியும் வராதால் ஒப்பந்ததாரர்கள் அதை கிடப்பில் போட்டுள்ளனர். அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தாம்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் பாண்டி:- ஏரிகளில் மடைகள் சிதலமடைந்து உள்ளதால் அதை உடனடியாக சீரமைக்க வேண்டும். அமரடக்கி உறுப்பினர் சிவசங்கர் உள்பட உறுப்பினர்கள் பலர் பேசினர். முன்னதாக ஒன்றிய அலுவலர் முருகையா தீர்மானங்களை வாசித்தார். மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments