பட்டுக்கோட்டையில் ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில் 20. 9. 2023 புதன்கிழமை மதியம் பட்டுக்கோட்டை பெரிய தெருவில் உள்ள அரசு இன்ஸ்டியூட்டில் ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது 

கருத்தரங்கினை பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன் தலைமை ஏற்றுதுவங்கி வைத்தார் 


 இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி  பட்டுக்கோட்டை கிளை சேர்மன் டி சுவாமிநாதன் மற்றும் பட்டுக்கோட்டை ஹோஸ்ட் லயன் சங்கத்தின் ஆலோசகர் சந்திர பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

 அரசு இன்ஸ்டியூட்டின் நிறுவனர் 
சிவ. நாடிமுத்து வரவேற்பு ஆற்றினார் 

கருத்தரங்கில் பட்டுக்கோட்டை ரயில் நிலைய தலைமை அதிகாரி கே மருது பாண்டியன் கலந்து கொண்டு பேசும் போது "இந்தியன் ரயில்வேயின் தோற்றம், அதன் வளர்ச்சி, இரயில்வேயின் சாதனைகள், இருப்பு பாதைகளில் வகைகள், பயணிகள் ரயில்களின் வகைகள், சரக்கு போக்குவரத்து ரயில்கள்,ரயில்வே போக்குவரத்து பாதுகாப்பு விதிமுறைகள்,  பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் விதம், கட்டண சலுகைகள், ரயில்வே துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு ரயில்வே சம்பந்தப்பட்ட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர் 

கூட்டத்தில், நிறுவனத்தின் சார்பில் இரயில் சுற்றுலா செல்லுதல், இரயில் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தல், பட்டுக்கோட்டை ரயில் நிலைய வளாகங்களில் தூய்மை செய்தல், மரக்கன்றுகளை நட்டு வளர்த்தல் போன்ற பணிகளை செய்ய முடிவு
செய்யப்பட்டது 

நிறைவாக பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கத்தின் செயலாளர் வ.விவேகானந்தம் நன்றி கூறினார்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments