காரைக்குடி & இராமநாதபுரத்தில் அயோத்தி - இராமேஸ்வரம் ஷர்தா சேது வாரந்திர ரயில் 22-09-2023 முதல் நின்று செல்லும் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு




ராமேஸ்வரத்திலிருந்து அயோத்தி செல்லும் ஷ்ரத்தா சேது அதிவிரைவு ரயில் காரைக்குடி & இராமநாதபுரம் ஸ்டேஷனில் நிறுத்தப்பட உள்ளது.

2017ம் ஆண்டு பிரதமர் மோடி ராமேஸ்வரம் பைசாபாத் இடையே ரயில் சேவையை தொடங்கி வைத்தார். விஜயவாடா, நாக்பூர், ப்ரயாக்ராஜ் அயோத்யா செல்லும் இந்த ரயில் காரைக்குடி & இராமநாதபுரம் நின்று செல்வதற்கு  மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

தற்போது ஷ்ரத்தா சேது அதிவேக விரைவு ரயில், இனி இராமநாதபுரம் காரைக்குடியில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அயோத்தி - இராமேஸ்வரம் 

அயோத்யாவில் இருந்து செப்.20 முதல் புதன்தோறும் இரவு 11:10க்கு புறப்பட்டு 
ப்ராயக்ரஜ், இடார்சி, நாக்பூர், விஜயவாடா, சென்னை எழும்பூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி வழியாக
காரைக்குடிக்கு வெள்ளி தோறும் இரவு 11: 08 மணிக்கும் இராமநாதபுரத்தில் சனிக்கிழமை தோறும் அதிகாலை 1.23 மணிக்கு வந்து பின்னர் ராமேஸ்வரம் செல்லும்...

இராமேஸ்வரம் - அயோத்தி 

மறு மார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து ஞாயிறு இரவு 11:55 க்கு புறப்பட்டு   செப்.24 முதல் திங்கள் தோறும்  இராமநாதபுரத்தில் அதிகாலை 12.48 மணிக்கு வந்து, காரைக்குடிக்கு 
அதிகாலை 2:58 மணிக்கு வந்து 
திருச்சி, மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னை எழும்பூர் , விஜயவாடா , நாக்பூர், இடார்சி, பிராயக்ரஜ் வழியாக 
அயோத்தி புதன்கிழமை காலை 4:55 மணிக்கு செல்லும்..

தமிழ்நாட்டில் அயோத்தி - இராமேஸ்வரம் வாரந்திர ரயில் இருமார்க்கதிலும் நின்று செல்ல ஊர்கள் 

சென்னை எழும்பூர்,
செங்கல்பட்டு,
விழுப்புரம்,
திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்),
மயிலாடுதுறை,
கும்பகோணம்,
தஞ்சாவூர்,
திருச்சி,
காரைக்குடி,
மானாமதுரை,
இராமநாதபுரம்,
இராமேஸ்வரம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments