முத்துப்பேட்டையில் போனில் ஆர்டர் கொடுத்து கூகுள் பே மூலம் பணம் அனுப்பவதாக கூறி அரிசி மூட்டைகள் அபேஸ் மர்ம நபர் நூதன மோசடி


கூகுள் பே மூலம் பணம் அனுப்பவதாக கூறி, ரூ.13 ஆயிரம் மதிப்பிலான அரிசி மூட்டைகள் மற்றும் மளிகை பொருட்களை பெற்று நூதன முறையில் ஏமாற்றிய சம்பவம் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பெரியக்கடை தெருவில் அரிசி கடை நடத்தி வருபவர் ஜாகிர் உசேன் (48). கடந்த 16ம் தேதி இவரை செல்போனில் தொடர்பு கொண்ட ஒரு நபர், புதுக்காளியமான் கோயிலில் அன்னதானம் செய்வதாகவும், அதற்கு அரிசி மூட்டைகள் மற்றும் மளிகை பொருட்களை தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அந்த பொருட்களை கோயிலுக்கு கொண்டு வந்து தரும்படியும், பில் தொகையை கூகுள் பே மூலம் அனுப்பதாகவும்  தெருவித்து இருக்கிறார்..

இதையடுத்து ஜாகிர் உசேன், அந்த நபர் கேட்டவாறு 5 மூட்டை அரிசி மற்றும் மளிகை பொருட்களை வேறு கடையில் வாங்கிக் கொண்டு கோயிலுக்கு சென்றார். ஆனால் அங்கு அந்த நபரை காணாததால், அவரை செல்போனில் தொடர்புகொண்டார். அப்போது, தான் வெளியில் இருப்பதாகவும், மளிகை பொருட்களை கோயில் குருக்களிடம் வழங்கும்படியும், பொருட்களுக்கான தொகை ரூ.13 ஆயிரத்து 390ஐ 'கூகுள் பே' செயலியில் அனுப்பதாகவும் தெரி வித்துள்ளார்.

இதையடுத்து ஜாகிர் உசேன். அரிசி மூட்டைகள் மற்றும் மளிகை பொருட்களை கோயில் குருக்களிடம் ஒப்படைத்துவிட்டு பணம் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் மீண்டும் கடைக்கு வந்துவிட்டார்.

ஆனால் வெகுநேரமாகியும்
பணம் வராததால் மீண்டும் அந்த நபரை ஜாகீர் உசேன் தொடர்பு கொண்டார். ஆனால் அந்த எண் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஜாகீர் உசேன் மீண்டும் கோயிலுக்கு சென்று குருக்க ளிடம் கேட்டிருக்கிறார்.

ஆனால் அதற்கு முன்னதாகவே மர்ம நபர் ஆட்டோவில் வந்து ஒரு மூட்டை அரிசியை கோயில் அன்னதானத்துக்கு கொடுத்து விட்டு 4 அரிசிமூட்டைகள், மளிகை சாமான்களை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்றது தெரியவந்தது. 

இவற்றின் மதிப்பு ரூ.14 ஆயிரம் இதையடுத்து ஏமாற்றப் பட்டதை அறிந்த ஜாகீர் உசேன், முத்துப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நூதன முறையில் ஏமாற்றிய அந்தநபரை வலைவீசி தேடிவருகின்றனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments