சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரையோரத்தில் ஒரு கோடி பனை விதை நடும் பணி அக்.1ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கிரீன் நீடா அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜ வேலு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியி ருப்பதாவது:

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ் நாட்டில் திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை 14 மாவட்டங்களில் 1,076 கிலோ மீட்டர் தொலை விற்கு கிழக்கு கடற்கரை யோரத்தில் ஒரு கோடி பனை விதை நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள் ளது. தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு,நாட்டு நலப்பணித்திட் டம் ஆகியன இணைந்து முன்னெடுக்கும் இப்பணி வரும் 24ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக் கப்பட்டு பணிகள் முழு வீச் சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதே நாளில் விநாயகர் சிலைகள் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கரைக்கும் நிகழ்வு நடைபெ றுதாக காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.எனவே, பனை விதைகள் நடும் பணி வரும் அக்டோபர் 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9மணிக்கு தொடங்கும் என் பதை தெரிவித்துக் கொள் கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments