முத்துப்பேட்டை டு சென்னை வெள்ளிக்கிழமை ரயில் பயணத்தில் பயணிகள் நலன் கருதி முத்துப்பேட்டை புதுபள்ளியில் (ரயில் நிலையம் அருகே) ஜூம்ஆ தொழுகை நேரத்தில் மாற்றம்



திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக செகந்திராபாத் - இராமநாதபுரம் வாரந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது ‌‌




செகந்திராபாத் - இராமநாதபுரம் 

செகந்திராபாத் - இராமநாதபுரம்   (வண்டி எண் 07695) 
வாராந்திர  சிறப்பு ரயில் புதன்கிழமை தோறும் இரவு 09.10 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னை எழும்பூரை அடைகிறது. பின்னர் அங்கிருந்து  திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி,  வழியாக சென்று வியாழக்கிழமை இரவு 11.45 மணிக்கு இராமநாதபுரம் சென்றடையும்.

இராமநாதபுரம் - செகந்திராபாத் 

இதைப்போல மறுமார்க்கத்தில் இராமநாதபுரம் - செகந்திராபாத் 
 (வண்டி எண் 07696) 
வாராந்திர சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை தோறும் காலை 9.50 மணிக்கு இராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு   காரைக்குடி , அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி திருவாரூர், வழியாக சென்னை எழும்பூர் வெள்ளிக்கிழமை  இரவு 9.50‌ மணிக்கு அடையும் பின்னர் மறுநாள் சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத்தை அடைகிறது. 

முத்துப்பேட்டையில் ஜூம்ஆ நேரம் மாற்றம் 

முத்துப்பேட்டையில் இருந்து சென்னைக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மதியம் 1:41 மணிக்கு வந்து 1:42 மணியளவில் ரயில் புறப்படும்.

ரயில் பயணிகள் நலன் கருதி முத்துப்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள முத்துப்பேட்டை புதுப்பள்ளியில்   பயான் & ஜும்ஆ தொழுகை மதியம் 1:25 மணிக்குள் முடிவடைந்து விடும்.

பயணிகள் ஜும்மா முடிந்த உடன் ரயில் நிலையத்தை அடைந்து பயணத்தை மேற்கொள்ளலாம். பொது மக்கள் இந்த ரயில் சேவையை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

செகந்திராபாத் - இராமநாதபுரம் வாரந்திர சிறப்பு ரயில் இரு மார்க்கத்திலும் எங்கெங்கு நின்று செல்லும் ?

செகந்திராபாத்  (ஹைதராபாத்),
நலகொண்டா, 
மிரியால்குடா,  
சட்டெனப்பள்ளி, 
குண்டூர் ,
தெனாலி, 
பாபட்லா, 
ஓங்கோல்,  
கவாலி ,
நெல்லூர் 
கூடுர்,
சென்னை எழும்பூர், 
செங்கல்பட்டு, 
விழுப்புரம், 
திருப்பாதிரிபூலியூர் (கடலூர்),
சிதம்பரம், 
சீர்காழி, 
மயிலாடுதுறை, 
திருவாரூர், 
திருத்துறைப்பூண்டி, 
முத்துப்பேட்டை,
அதிராம்பட்டினம், 
பட்டுக்கோட்டை, 
அறந்தாங்கி, 
காரைக்குடி,
சிவகங்கை, 
மானாமதுரை, 
இராமநாதபுரம்,   

ஆகிய ரயில் நிலையங்களில் 
நின்று செல்லும்







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments