ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் மழை வேண்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் உள்ள குளங்கள், குட்டைகள், கிணறுகளில் தண்ணீர் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. நீர்நிலைகளும் வற்றி விட்டதால் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காத அவல நிலை உள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதங்களில் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கோவில் திருவிழாக்களில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஒன்றிணைந்து மழை வேண்டி சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடத்தினர். இதுபோல் பள்ளிவாசல்களிலும் தொடர்ந்து மழை வேண்டி பிரார்த்தனைகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று பனைக்குளத்தில் தலைமை இமாம் ஹாஜா முகைதீன் தலைமையிலும் மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிவாசல்களிலும் நடைபெற்ற ஜும்மா தொழுகைக்குப் பின் மழை வேண்டி கூட்டு தொழுகை நடைபெற்றது. இந்த பிரார்த்தனையில் முஸ்லிம் பரிபாலன நிர்வாகிகள், முஸ்லிம் நிர்வாக சபை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். தலைமை இமாம் இறைவனை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments