அறந்தாங்கியை தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்




தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட பேரவைக்கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜபருல்லா தலைமை தாங்கினார். கூட்டத்தை தொடங்கி வைத்து மாநில செயலாளர் குபேரன் பேசினார். அறந்தாங்கியை தலைமையிடமாக கொண்டு தனி வருவாய் மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும். புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி மீண்டும் உருவாக்க வேண்டும். ஆவுடையார்கோவிலை சுற்றுலாத்துறை மேம்படுத்த வேண்டும். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பெண்களுக்கு நவீன கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட கடல் பகுதியில் கடல் பசுவை பாதுகாக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments