கட்டுமாவடி , கிருஷ்ணாஜிப்பட்டினம் , திருமங்கலப்பட்டினம் , கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதியில்புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு






  கட்டுமாவடி , கிருஷ்ணாஜிப்பட்டினம் ,  திருமங்கலப்பட்டினம் , கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதியில்புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு செய்தார்


கட்டுமாவடி 

புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், வருவாய்த்துறையின் சார்பில், கடலோர பேரிடர் தணிப்புத் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு பேரிடர் மையக் கட்டிடத்தின் புனரமைப்புப் பணிகளை, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள்  (23.09.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வட்டாட்சியர் திரு.சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பவர் உள்ளனர்.


கிருஷ்ணாஜிப்பட்டினம் 

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணாஜிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறைகளுடன் கூடிய பள்ளிக் கட்டிடப் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள்  (23.09.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.அரசமணி, உதவிப் பொறியாளர் திரு.தமிழ்யானி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.



திருமங்கலப்பட்டினம்
 
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணாஜிப்பட்டினம் ஊராட்சி, திருமங்கலப்பட்டினம் கிராமத்தில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், மேற்கொள்ளப்பட்டுவரும் சாலைப் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள்  (23.09.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.அரசமணி, உதவிப் பொறியாளர் திரு.தமிழ்மணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
 

கோட்டைப்பட்டினம்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.பெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள்  (23.09.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி இயக்குநர் (மீன்வளத்துறை) (பொ) திருமதி.ரம்யாலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.


ஜெகதாப்பட்டினம்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், ஜெகதாபட்டினம் விசைப்படகு துறைமுகத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள்  (23.09.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி இயக்குநர் (மீன்வளத்துறை) (பொ) திருமதி.ரம்யாலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments