புதுக்கோட்டை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாத கலந்தாய்வு கூட்டம்! 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலையை நடைமுறைப்படுத்த வேண்டுகோள்!!
புதுக்கோட்டை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாத கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் (COITU) மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வீரமுத்து முன்னிலை வகித்தார். பன்னீர் செல்வம் சிறப்புரையாற்றினார். மாவட்ட துணை செயலாளர் ராஜ செல்லபாண்டியன் உறுதிமொழியை வாசித்தார்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்:1
தமிழக அரசு தொழிற்சாலைகள் சட்டம் 1948 பிரிவு 65A சட்ட திருத்தத்தை கைவிட்ட பிறகும், GVK EMRI (GREEN HEALTH SERVICES) நிர்வாகம் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு சட்டவிரோதமாக 12 மணி நேர வேலை நேரத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதை கைவிட்டு
8 மணி நேர வேலை நேரத்தை நடைமுறைப் படுத்திட நடவடிக்கை எடுக்க நிர்வாகத்திடம் கோரிக்கை வைப்பதன அனைத்து தொழிலாளர்கள் சார்பாக ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம்:2
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியத்தை முறையாக முழுமையாக வழங்காமல் GVK EMRI (GHS) நிர்வாகமே தன்னிச்சையாக முடிவு செய்து ஊதிய உயர்வு வழங்கி தொழிலாளர்களின் ஊதியத்தை சட்டவிரோதமாக பிடித்தம் செய்ய எத்தனிக்கும் நிர்வாகத்தின் சதி செயலுக்கு வழி வகுக்காமல் எங்களது தொழிற்சங்கம் எழுப்பியுள்ள 2022-2023 ஆண்டிற்கான வருடாந்திர ஊதிய உயர்வு தொழிற்தாவா மீது தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோரிக்கை வைப்பதென அனைத்து தொழில்கள் சார்பாக விவாதிக்கப்பட்டு ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம்:3
சட்ட விரோதம் ஒன்றையே சட்ட திட்டங்களாக கொண்டு GVK EMRI (GREEN HEALTH SERVICES) நிர்வாகம் தொழிற்சங்க முன்னணி ஊழியர்கள் மீது பொய்ப் புகார் எழுப்பி சட்ட விரோதமாக பணிநீக்கம், பணியிட மாறுதல் செய்யும் நிர்வாகத்தின் சட்டவிரோத, தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க விரோத போக்கினை கைவிடச் செய்வதற்கு அரசு அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து EMRI GREEN HEALTH SERVICES நிர்வாகத்தால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரியும், தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பதென விவாதிக்கப்பட்டு ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம்:4
தமிழகம் முழுவதும் ஆள் பற்றாக்குறையை காரணம் காட்டி தினந்தோறும் பல 108ஆம்புலன்ஸ்களை இயக்காமல் நிறுத்தி வைக்கப் படுவதை கைவிட்டு அனைத்து 108ஆம்புலன்ஸ்களையும் தங்குதடையின்றி இயக்க நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும், புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொலைதூர லொக்கேஷனுக்கு பழிவாங்கும் போக்கில் திட்டமிட்டு பணி வழங்குவதை கைவிட்டு பணி வரையரை அட்டவணை தயாரித்து நிலையான பணியிடம் வழங்க வேண்டி வலியுறுத்தியும் நிர்வாகத்திடம் கோரிக்கை வைப்பது என விவாதிக்கப்பட்டு ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம்:5
108ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை சட்டவிரோதமாக பழி வாங்குவதற்காக கூடுதலான டீசல் மைலேஜ் கொடுக்க வேண்டும் என்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை கட்டாயப்படுத்தி இடமாற்றம் செய்யும் போக்கினை கைவிட வலியுறுத்தியும், மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிலாளர் அடிப்படை வசதிகள் தொடர்பான 17-10-2014 தேதியிட்ட ஒப்பந்தத்தை நடைமுறை படுத்தாத புதுக்கோட்டை மாவட்ட மண்டல அதிகாரிகள் மீது தொழிற் தகராறுகள் சட்டம் 1947 பிரிவு 29ன் கீழ் ஒப்பந்த மீறல் வழக்கு தொடுப்பது எனவும், 108 AWU COITU தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் மீது பாரபட்ச நடவடிக்கையில் ஈடுபடும் மாவட்ட மண்டல அதிகாரிகள் மற்றும் மனித வளத்துறை அதிகாரி திருமதி.அம்மு மோகன் மீதும் தொழிற்தகராறுகள் சட்டம் 1947 பிரிவு 25U,25Bன் கீழ் வழக்கு தொடுப்பது எனவும் விவாதிக்கப்பட்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments